மன்னிப்பு கோரினார் யூடியூபர் இர்பான்!! மன்னிப்பு வீடியோ வெளியிடுவதாக அறிவிப்பு..!!

Photo of author

By Priya

youtuber irfan: யூடியூபில் பிரபலமாக உள்ளவர் தான் புட் ரிவியூவர் இர்பான். இவரின் யூடியூப் சேனலில் மட்டும் 4.28 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டுள்ளவர். இவர் சமீபக்காலமாக தமிழ் சினிமாவின் நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைவருடனும் வீடியோ எடுத்து அதனை அவரின் யூடியூப் சேனலில் பதிவேற்றி அனைவரின் மத்தியிலும் பிரபலமானார்.

இவரை தற்போது தெரியாதவர்கள் யாரும் இல்லை என்ற அளவிற்கு இர்பான் மிகவும் பிரபலமாக உள்ளார். அந்த வகையில் இர்பான் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மேலும் அனைவரிடமும் பிரபலமாக உள்ளார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஹசீஃபாவை திருமணம் செய்துக்கொண்டார்.

இவர் வழக்கமாக உள்ளூர் முதல் வெளிநாடு வரை உள்ள ஓட்டல்களுக்கு சென்று புட் ரிவியூ செய்வது வழக்கம். அது போக வீட்டில் நடக்கும் வேடிக்கையான நிகழ்ச்சிகள், ஆகியவற்றை இவர் யூடியூப் சேனலில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் இவர் தற்போது அவரது மனைவியின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றி இருப்பது சர்ச்சையாகி உள்ளது.

யூடியூபர் இர்பானின் மனைவி ஹசீஃபா தற்போது கர்ப்பமாக உள்ளார். இவரின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிவதற்காக மனைவியுடன் துபாய் சென்று வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து வந்துள்ளனர். அதனை தனது நண்பர்கள் என அனைவரையும் அழைத்து நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்து அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இது அனைவரின் மத்தியிலும் பேசுபொருளாகி (youtuber irfan issue in tamil) சர்ச்சையானது.

இந்நிலையில் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இர்பான் நேற்று தனது யூடியூப் சேனலில் இருந்து அந்த பதிவை நீக்கினார். மேலும் யூடியூபர் இர்பானுக்கு நாேட்டீஸ் வாட்ஸ் ஆப் மூலமாகவும், இமெயில்  மூலமாகவும் அனுப்பிருந்தது தமிழ்நாடு சுகாதாரத்துறை. இந்நிலையில் தான் செய்தது தவறு என்று யூடியூபர் இர்பான் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கோரி பதிவிட்டுள்ளார். மேலும் அதற்காக மன்னிப்பு வீடியோ ஒன்றை வெளியிடுவதாகவும் சுகாதாரத்துறையிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: Singer Suchitra: வில்லங்கத்தை கிளப்பிய பாடகி சுசித்ரா.. கோபத்தில் நடிகை த்ரிஷா!