ரசிகரின் ஆசையை உடனே நிறைவேற்றிய யுவன் சங்கர் ராஜா!

Photo of author

By Sakthi

ரசிகரின் ஆசையை உடனே நிறைவேற்றிய யுவன் சங்கர் ராஜா!

Sakthi

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அதோடு அவருக்கு தற்போது லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். அண்மையில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா அவர்களின் இசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது. அதோடு விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் மாமனிதன் திரைப்படத்தில் யுவன் சங்கர் ராஜா இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றி இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்சமயம் யுவன் சங்கர் ராஜா வலிமை,மாநாடு போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், நேற்றையதினம் யுவன்ஷங்கர் ராஜா தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் புகையிலை விழிப்புணர்வு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நீங்கள் கடைபிடிப்பதால் உங்களுடைய உடம்பில் மெதுவாக விஷத்தை ஏற்றுக் கொள்வதுடன் உங்களை சூழ்ந்து இருப்பவர்களுக்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் இதன் காரணமாக, குழந்தைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வந்தார்கள் அதில் ஒரு ரசிகர் ஓகே நீங்க ஒரு ஹாய் சொன்னா சிகரெட் பிடிப்பதை விட்டு விடுகிறேன் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு உடனே யுவன் ஷங்கர் ராஜா ஹாய் என்று பதிலளித்திருக்கிறார் அவருடைய இந்த பதிவு தற்சமயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.