மேலும் இரண்டு வீரர்களுக்கு உறுதியான நோய் தொற்று! பேரதிர்ச்சியில் இந்திய அணி!

0
111

ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஒரு நாள் தொடரை வெற்றிபெற்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் இலங்கையிடம் இழந்தது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்தது. ஒருநாள் போட்டியை போலவே டி20 தொடரையும் இந்திய அணி கைப்பற்றி விடும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரிய அளவில் இருந்தது.

இந்த சூழலில் 2வது போட்டி நடந்தபோது குர்ணால் பாண்டியாவுக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி அடுத்த தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதோடு அவருடன் தொடர்பில் இருந்த தீபக் சாகர், இஷன் கிஷன், பிரித்வி ஷா, யஸ்வேந்திர சாகல், கிருஷ்ணப்பா கௌதம், உள்ளிட்டோர் தனிமைப்படுத்தப் பட்டார்கள். இதனைத் தொடர்ந்து முக்கிய வீரர்கள் இல்லாமல் களம் இறங்கிய இந்திய அணி அடுத்த 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது அதோடு தொடரையும் இழந்தது.

இந்த சூழ்நிலையில், அவருடைய தொடர்பில் இருந்த மேலும் 8 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்ததில் யுஸ்வேந்தர சாகல் மற்றும் கிருஷ்ணப்பா கவுதம் உள்ளிட்டோருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

Previous articleசேலம் அருகே நடந்த விபத்தின் கொடூரம்! சிகிச்சை பலனின்றி மரணம்!
Next articleடோக்கியோ ஒலிம்பிக்! இந்திய மகளிர் ஹாக்கி அணி காலிறுதிக்கு முன்னேற்றம்!