பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான்!! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!

Photo of author

By Sakthi

பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் சேர்ந்தால் பூஜ்ஜியம்தான்!! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!!
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஒ பன்னீர் செல்வம் அவர்களும் அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் அவர்களும் சில தினங்களுக்கு முன்னர் சந்தித்ததை அடுத்து அதிமுக கட்சி தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்.
அதிமுக கட்சியில் முதலமைச்சராகவும் துணை முதலமைச்சராகவும் செயல்பட்டு வந்த ஓ பன்னீர் செல்வம் அவர்கள் அந்த கட்சியை சேர்ந்த எடப்பாடி கே பழனிசாமி அவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்றார். இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் அமமுக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் அவர்களுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பு குறித்து அரசியல் தலைவர்கள் பலரும் கேலியும் கிண்டலுமாக அவர்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அதிமுக கட்சித் தலைலர் எடப்பாடி கே பழனிசாமி அவர்களும் கருத்து தெரிவித்துள்ளார்.
மாயமானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளன என்று ஓபிஎஸ், டிடிவி சந்திப்பை விமர்சனம் செய்த எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் இவர்களது சந்திப்பு காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்ததைப் போலத்தான் இருக்கின்றது என கூறியுள்ளார். மேலும் ஓ பன்னீர் செல்வம் அவர்கள் டிடிவி தினகரனுடன் சேர்ந்தால் பூஜ்ஜியமும் பூஜ்ஜியமும் ஒன்று சேர்ந்தால் பூஜ்ஜியம்தான் வரும். அது போலத்தான் இவர்களது சந்திப்பு என்று கூறியுள்ளார்.