உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய ஜிம்பாப்வே அணி! சோகத்தில் மூழ்கிய ஜிம்பாப்வே ரசிகர்கள்!!

0
116

உலகக்கோப்பையில் இருந்து வெளியேறிய ஜிம்பாப்வே அணி! சோகத்தில் மூழ்கிய ஜிம்பாப்வே ரசிகர்கள்!!

 

நேற்று அதாவது ஜூலை 4ம் தேதி நடந்த தகுதிச் சுற்றுப் போட்டியில் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி தோல்வி பெற்றதால் ஜிம்பாப்வே அணி நடப்பு உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 10 சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

 

நேற்று(ஜூலை4) தேதி ஸ்காட்லாந்துக்கு எதிராக நடைபெற்ற உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் டாஸ் வென்ற ஹ

ஜிம்பாப்வே அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள்எடுத்தது.

 

ஸ்காட்லாந்து அணியில் அதிகபட்சமாக மைக்கேல் லீஸ்க் 48 ரன்களும், மேத்யூவ் கிராஸ் 38 ரன்களும், பிரண்டன் மெக்மெலன் 34 ரன்களும், முன்சே 31 ரன்களும் எடுத்தனர. ஜிம்பாப்வே அணியில் பந்துவீச்சில் சீன் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளையும் சட்டாரா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

இதையடுத்து 235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாய்ல்ர்ட் கம்பி ரன் எதுவும் எடுக்காமலும் கிரிய்க் எர்வின் 2 ரன்களுக்கும ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதன் பின்னர் களமிறங்கிய இன்னசென்ட் கலா, சீன் வில்லியமஸ் இருவரும் தலா 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் களமிறங்கிய சிக்கந்தர் ராசா அவர்களும் ரயன் பர்ல் அவர்களும் பொறுமையாக ரன் சேர்க்க ஆரம்பித்தனர்.

 

34 ரன்கள எடுத்திருந்த நிலையில் சிக்கந்தர் ராசா ஆட்டமிழக்க தொடர்ந்து விளையாடிய ரயன் பர்ல் அரைசதம் அடித்தார். ரயன் பர்ல் அவர்களுடன் சேர்ந்த வெஸ்லி மதவெரெ அவரும் தனது பங்குக்கு 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

 

பின்னர் ஒரு புறம் ரயன் பர்ல் ரன் சேர்க்க மறுபுறம் மற்ற பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி வரை போராடிய ரயன் பர்ல் 83 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

 

இதனால் ஜிம்பாப்வே அணி 41.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 203 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் 33 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து அணியில் பந்துவீச்சில் கிறிஸ் சொலே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிரண்டன் மெக்மலன், மைக்கேல் லீஸ்க் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர். மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றிய கிறிஸ் சொலே ஆட்டநாயகன் விருதை வென்றார்.

 

ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி பெற்றதால் ஜிம்பாப்வே அணி 2023ம் ஆண்டுக்கான சூப்பர் 10 சுற்றில் இருந்து வெளியேறியுள்ளது. ஸ்காட்லாந்து அணி இந்த வெற்றியின் மூலம் சூப்பர் 10 சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்கவைத்துள்ளது.

 

நெதர்லாந்துக்கு எதிராக நடக்கும் கடைசி போட்டியில் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்ற்ல் மட்டுமே சூப்பர் 10 சுற்றுக்கு தகுதி பெற முடியும். நெதர்லாந்து அணி சூப்பர்10 சுற்றுக்கு தகுதி பெற ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் கட்டாயமாக வெற்றி பெற்று நல்ல ரன்ரேட் பெற வேண்டும்.

 

Previous articleதக்காளிக்கு நிபந்தனைகளை விதித்த தமிழக அரசு!! நியாய விலை கடைகளில் இந்த முறை தான் அமல்!!
Next articleபாஜகவில் இணைந்த புதிய நடிகர்!! ஷாக்கில் இதர கட்சி தலைவர்கள்!!