அக்னி நட்சத்திர நாட்களில் மறந்தும் இந்த சுப காரியங்களை செய்யாதீர்கள் மக்களே உங்களுக்குத்தான்!!
அக்னி நட்சத்திரத்தை கத்திரி வெயில் என்று கூறுவதும் உண்டு, அந்த வகையில் இதனை ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் பூர்வமாகவும் ஒவ்வொரு காரணங்களை முன்வைக்கின்றனர்.
இந்த அக்னி நட்சத்திரம் ஆனது இன்று முதல் தொடங்கி இம்மாதம் இறுதியில் 29/5/2023 வரை காணப்படும்.
அந்த வகையில் சூரிய பகவான் பூமியை சுற்றி வரும் காலத்தை வைத்து அதாவது மூன்றாம் காலில் அவர் இருக்கும் நிலையில் அக்னி நட்சத்திரம் என்று கூறுகின்றனர்.
அடுத்து அவர் அடுத்தடுத்த மாதங்களில் தெற்கிலிருந்து வடக்கு எனவும் அதனைத் தொடர்ந்து வடக்கிலிருந்து மேற்கு என அடுத்தடுத்து தனது பயன நிலையை மாற்றிக் கொண்டே இருப்பார்.
அதற்கேற்றார் போல் கால சூழ்நிலையும் மாறும். இதுதான் ஆன்மீக ரீதியாக கூறப்படும் காரணம்.
இதுவே அறிவியல் பூர்வமாக கூற வேண்டும் என்றால் சூரியனின் கதிர்வீச்சானது 90 டிகிரி கோணத்தில் அதாவது செங்குத்தாக பூமியை நோக்கி விழும் பொழுது அக்காலம் கோடை காலம் அக்னி நட்சத்திரமாக மாறுகிறது.
இவ்வாறு அக்னி நட்சத்திரத்தில் நாம் எந்தெந்த சுப காரியங்கள் செய்யலாம் எந்தெந்த சுப காரியங்கள் செய்யக்கூடாது என்ற வரைமுறை உள்ளது.
அந்த வகையில் இந்த அக்னி நட்சத்திர நாட்களில் எந்த ஒரு சுபகாரிய பேச்சுக்களும் எடுக்க மாட்டார்கள்.
ஏனென்றால் அக்னி நட்சத்திர தோஷம் ஏற்பட்டுவிடும் என்று ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கூறுவர்.
அந்த காரணத்தினாலேயே பெரும்பான்மையாக பெரும்பான்மையான சுபகாரியங்கள் நடைபெறாது.
இதனை பலரும் தவறாக புரிந்து கொண்டு நிச்சயதார்த்தம் கல்யாணம் வளைகாப்பு போன்றவற்றை தள்ளி வைக்கின்றனர்.
ஆனால் இதனை எல்லாம் அக்னி நட்சத்திர நாட்களில் நாம் செய்யலாம். இதனை தவிர்த்து புதிய நிலம் வாங்குவது வீடு கட்டுவது மரம் செடி போன்றவற்றை வைப்பதற்காக பணிகளை ஆரம்பிப்பது இதனை எல்லாம் செய்வது தவிர்க்க வேண்டும்.
அதேபோல இந்த அக்னி நட்சத்திரத்தில் ஏழை எளிய மக்களுக்கு உணவு அளிப்பது மிகப்பெரிய புண்ணியத்தை ஏற்படுத்திக் கொடுக்கும்.