அடேங்கப்பா..! அரசியல்வாதிகளை வாய்ப்பிளக்க வைத்த நடிகை..!

0
236

தேர்தல் களத்தில் நாள்தோறும் புதுபுது யுக்திகளை கையாண்டு வரும் நடிகை குஷ்பு இன்று திறந்தவெளி ஆட்டோவில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் நடிகை குஷ்பு தேர்தல் தேதி நெருங்க நெருங்க தினந்தோறும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தான் போட்டியிடும் ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவுக்கு பலமிகுந்த தொகுதி என்பதாலும் அங்கு திமுக சார்பில் எழிலன் போட்டியிடுவதாலும் நாள்தோறும் திட்டமிட்டு பிரச்சாரத்தில் குஷ்பு ஈடுபட்டு வருகிறார். ஆயிரம் விளக்கு தொகுதி சிறுபான்மையினர் அதிகம் வசிப்பதால் குஷ்புவும் சிறுபான்மையின பெண் என்பதை சுட்டிக்காட்டி வாக்குகளை சேகரித்து வருகிறார்.

அடேங்கப்பா..! அரசியல்வாதிகளை வாய்ப்பிளக்க வைத்த நடிகை..!

வீடு வீடாக செல்லும் குஷ்பு சிரித்த முகத்துடன் அனைவரிமும் தனக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். நேற்று தனது கணவர் சுந்தர் சி உடன் சென்று வாக்கு சேகரித்த குஷ்பு இன்று வேறு ஒரு யுக்தியை கையாண்டுள்ளார். அதாவது திறந்தவெளி ஆட்டோவில் சென்ற குஷ்பு அனைவரிடமும் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டதுடன், செல்லும் வழிநெடுகிலும் பொதுமக்கள் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க தானே அவர்களது செல்போனை வாங்கி செல்பி எடுத்து கொடுத்தார்.

Previous articleகத்தி படம் போல் நீதிபதி முன்பு தனது கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞர்..!
Next articleகாயத்தால் கேப்டன் மோர்கன் விலகல் – பின்னடைவில் இங்கிலாந்து

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here