அதிரடி பரிசு அறிவிப்பு! புனே: ராயல் என்ஃபீல்டு வாகனம் பரிசாக வழங்கப்படும்! போட்டி என்ன தெரியுமா?

Photo of author

By Parthipan K

புனே நகரத்தில் சொந்தமாக ஹோட்டல் நடத்தி வரும் அதுல் வாய்கர். இவரது ஹோட்டலில் வழங்கப்படும் நான் வெஜ் சாப்பாட்டு ரகங்கள் மிகவும் பிரபலமானவை ஆகும். அதிலும் மால்வானி மீன் சாப்பாடு, ஸ்பெஷல் ராவண் சாப்பாடு, புல்லட் சாப்பாடு போன்ற 6 வகையான உணவுகள் அந்த ஹோட்டலில் வழங்கப்படுகிறது.

இந்த உணவுகளின் ஒவ்வொரு தனி ரகமும் ரூபாய் 2500 என்கிற மதிப்பில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த கொரோனா காலகட்டத்தில் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதையடுத்து அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அதுல் வாய்கர்.

அதாவது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதற்காக பம்பர் பரிசாக ரூபாய் 1.65 லட்சம் மதிப்புடைய ராயல் என்ஃபீல்ட் இருசக்கரவாகனம் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் போட்டி என்னவென்றால், 4 கிலோ எடை உடைய நான் வெஜ் சாப்பாட்டை ஒரு மணி நேரத்தில் சாப்பிட்டு முடிக்க வேண்டுமாம்.

இந்த நான்கு கிலோ எடை கொண்ட பிரம்மாண்ட உணவினை 55 சமையல் கலை வல்லுநர்கள் தயாரிக்கின்றனராம். இதில் 12 வகையான உணவுகள் பரிமாறப்படுகிறது. Chicken masala with prawn briyani, Chicken Tandoori, Pomfret fried fish, Dry mutton,Fried surmai, Grey mutton ஆகியவையும் இடம்பெறுகின்றது. இந்த போட்டியில் பல இளைஞர்கள் கலந்துகொண்டனர் ஆனால் வெற்றி பெற்றவர் ஒரு இளைஞர் மட்டுமே.

அவர் சோலாப்பூர் என்ற ஊரைச் சேர்ந்த சோம்நாத் பவார் என்பவர் ஆவார். தற்போது ஒரு நாள் ஒன்றுக்கு இந்த போட்டியில் 65 இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர். அதனால் இந்த ஹோட்டலின் உரிமையாளர் அதுல் வாய்கர் பரிசாக அளிப்பதற்கு 5 ராயல் என்ஃபீல்ட் வாகனங்களை தனது கடையின் முன், எப்போதும் நிறுத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.