அமெரிக்கா நடத்திய 20 வருட போர் -வென்றது யார் ?வீழ்ந்தது யார்?

0
115

அமெரிக்க ராணுவம் கடந்த 20 ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தான் நாட்டின் மீது போர் நடத்தி வருகிறது. அண்மையில் வெளியான தகவலின்படி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆப்கானிஸ்தான் உடனான போர் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிந்துவிடும் எனக் கூறியுள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தோகாவில் தலிபான் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் கோரிக்கைகளை தலிபான் அரசு ஏற்றுக்கொண்டது.

அமெரிக்காவின் கோரிக்கைகள் என்னவென்றால்- ஆப்கானிஸ்தான் அரசிடம் தலிபான் அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து பின்வாங்கும் அமெரிக்க வீரர்கள் மீது தலிபான் அரசு தாக்குதலில் ஈடுபடக்கூடாது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் கூறியது என்னவென்றால்,
அமெரிக்க படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து விரைவில் திரும்பி பெற்று விடுவோம். நாங்கள் தலிபான் அரசை முழுமையாக நம்பவில்லை என்றாலும் ஆப்கானிஸ்தான் அரசை காக்கும் சக்தி தலிபான் அரசுக்கு உண்டு என்று எங்களுக்கு தெரியும். ஆப்கானிஸ்தான் அரசு ஒன்றுகூடி அவர்களது நாட்டினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தின் தாக்குதல் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் முடிந்து விடும் என அவர் கூறியுள்ளார்.

இப்படியாக கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து கொண்டிருந்த போரை சமரச பேச்சுவார்த்தைகள் அமெரிக்கா முடித்து வைத்தது. இதனை பல்வேறு நாடுகளும் வரவேற்கிறது. ஆப்கானிஸ்தானில் வாழும் அமெரிக்க மக்கள் இதனை பாராட்டியுள்ளனர் மற்றும் இவர்களுக்கு ஜோ பைடனுக்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Previous articleகுழந்தைகள் விரும்பும் புத்தகமாக பாட புத்தகம் அமையும்! அன்புமணி ராமதாஸுக்கு பதிலடி – திண்டுக்கல் ஐ.லியோனி!
Next articleதமிழக பா.ஜ.க தலைவராக இவரை நியமித்த ஜே.பி.நாட்டா!