அயோத்தி தீர்ப்பு குறித்து அர்ஜூன் சம்பத் வெளியிட்டுள்ள அதிரடி வீடியோ!

0
350

அயோத்தி தீர்ப்பு குறித்து அர்ஜூன் சம்பத் வெளியிட்டுள்ள அதிரடி வீடியோ!

அயோத்தி பிரச்சனைக்கு இன்று சுப்ரீம் கோர்ட் அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பின் மூலம் கிட்டத்தட்ட முடிவு ஏற்பட்டுவிட்டதை அடுத்து இந்த தீர்ப்புக்கு பெரும்பாலானோர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்து மக்கள் கட்சியை சேர்ந்த அர்ஜூன் சம்பத் இதுகுறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது

வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு. இந்திய நீதித்துறைக்கு கிடைத்திருக்கின்ற மாபெரும் வெற்றி. ஒட்டுமொத்த இந்தியர்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த தேசத்தில் அவதரித்த பகவான் ராமருக்கு வெற்றி. இன்று சனிக்கிழமை பிரதோச நாளில் இந்த தீர்ப்பு வெளிவந்துள்ளது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

ராமர் பிறந்த இடத்தில் ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என்பது என்னுடைய வாழ்நாள் கனவு. இதற்காக நாங்கள் அடிபட்டு இருக்கின்றோம், உதைபட்டு இருக்கின்றோம். பல உயிர்கள் பலியாகியுள்ளது. ஒருசிலர் இறக்கும் தருவாயில் கூட என்னிடம் சொன்னது எப்படியாவது ராமர் கோவில் கட்டவேண்டும் என்பதுதான். இன்று உச்சநீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கி அதனை உறுதி செய்துள்ளது

ஒட்டுமொத்தமாக பார்த்தால் அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற எங்களுடைய கனவு நிறைவேறப் போகிறது. நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர் கிடையாது. யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல. ராமர் பிறந்த இடத்தில் ஆலயம் அமைக்க வேண்டும் என்பதே எங்களுடைய ஒரே நோக்கம். அந்த நோக்கத்தை இன்று உச்சநீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கின்றோம். நாடு முழுக்க இருக்கக்கூடிய கரசேவகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எப்படி காஷ்மீர் பிரச்சனை சட்டத்தின் மூலம் தீர்வு காணப்பட்டதோ, அதேபோல் அயோத்தி பிரச்சனை நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது

இவ்வாறு அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்

Previous articleகாவி அரசியல் எதிரொலி: திருவள்ளுவரை சிறையில் வைத்த போலீசார்
Next articleஆட்சி அமைக்க பாஜகவிற்கு அழைப்பு விடுத்த ஆளுநர்! சிவசேனா சமாதானம் ஆகுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here