பிரேமம் இயக்குனரின் அடுத்த படத்தில் பிருத்விராஜ் & நயன்தாரா – வெளியான ரிலீஸ் தேதி

0
329

பிரேமம் இயக்குனரின் அடுத்த படத்தில் பிருத்விராஜ் & நயன்தாரா – வெளியான ரிலீஸ் தேதி

நேரம் பிரேமம் ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ள அல்போன்ஸ் புத்ரன் அடுத்து கோல்ட் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிரேமம். இந்த படத்தில் நடிகர் நிவின் பாலி, நடிகை சாய் பல்லவி ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கி இருந்தார். மலையாளத்தில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டு வெளியானது.

மலையாள திரைப்படமாக இருந்தாலும் கூட சென்னையில் இந்த திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேல் ஓடி சாதனை படைத்ததாக சொல்கிறார்கள். தென்னிந்திய சினிமாவில் ஒரு புதிய ட்ரண்ட்டிங் சினிமாவாக அமைந்தது. தற்சமயம் அல்போன்ஸ் புத்திரன் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருக்கின்றார். ரசிகர்களுடைய கேள்விக்கு தொடர்ச்சியாக பதில் அளித்து வருகின்ற அவர் பிருத்விராஜ் மற்றும் நயன்தாரா நடிப்பில் கோல்ட் என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டர் மற்றும் டீசர் ஆகியவை சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இந்நிலையில் இந்த திரைப்படம் ஓனம் பண்டிகைக்கு வெளியாகும் என தற்போது அல்போன்ஸ் புத்ரன் அறிவித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மலையாள திரைப்படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். திருமணத்துக்குப் பிறகு அவர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகும் முதல் படமாக கோல்ட் அமைந்துள்ளது. இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.