ஆண்கள் உடலுறவில் செய்யும் தவறு/திருத்திக்கொள்ள வேண்டும் எனப் பெண்கள் கருதுவது எது?

Photo of author

By Kowsalya

 

அதிகமாக இணையத்திலும் போர்ன் வீடியோக்களையும் பார்ப்பதால் உடலுறவில் சீராக இல்லாமல் பல பெண்களின் வாழ்வு அழிந்து விடுகிறது ! இது ஓர் உளவியல் ஆராய்ச்சி மட்டுமல்ல, நரம்பியல் பிரச்சனையும் கூட

கட்டாயப்படுத்தி எதையும் செய்தால் மன நோய்க்கு உள்ளாகிறார்கள் பெண்கள் ! இருவருக்கும் விருப்பப்பட்டே செய்தல் வேண்டும்

பெண்ணின் பண்பு இதமாக உணர்வுகளில் தொடங்கும் ! அவளுடைய உடல் அமைப்பு வேறு ரகம் ! ஆண்களின் அமைப்பும் மூளை / நிரம்பு / உடல் உணர்ச்சிகளும் வேறு வகை ! நன்றாக பேசி புரிந்து கொண்டால் பெண்களின் தேவைகளை அவர்கள் சொல்வார்கள் அல்லது அவர்களை கேட்க வேண்டும்

 

செல் / கைப்பேசி / டிவி / லேப்டாப் படுக்கை அறையில் வைத்து அதையே பயன்படுத்தி உடல் வலு இழந்துவிட்டால் பெண்ணை திருப்திப்படுத்த முடியாமல் வாழ்க்கை கசந்து விடும்

உடல் பயிற்சி , முக்கியமாக மண்ணில் ஏதாவது ஓர் பொழுதுபோக்கு. உதாரணம் : தோட்ட வேலை செய்தல் ரூட் சக்ரா எனப்படும் மூலாதாரம் வலுவாக இருக்கும் ! அப்பொழுது தான் பெண்ணை நன்றாக திருப்தி படுத்த முடியும்

போர்ன் வீடியோக்களில் போடப்படும் அனைத்துமோ இல்லையேல் விபச்சாரி விடுதிகளில் ஏற்பட்ட அனுபவமோ அல்லது அசாதாரண வகையிலான உடலுறவை மனைவியிடம் எதிர்பார்ப்பது , விபரீத எண்ணங்கள் கொண்ட எண்ணற்ற வகைகளில் நடந்து கொள்வது போன்றவற்றால் மனைவி பைத்தியமாக நேரிடும் ! குறைந்த பட்சம் விவாகரத்து !

இந்த சுகம் இரு பாலருக்கும் சொந்தம். இதை புரிந்து கொண்டால் நல்லது

பெண்களுக்கு உணர்வு ரீதியாக சுகமும் தேவையும் அதிகம் ! தாம்பத்திய முழுமையை விட அவர்களுக்கு வேறு சில தேவைகள் இருக்கும் ! அதை தெரிந்து கொள்ளவும் ! உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர்களை படுக்கை அறையில் புகழ்ந்து வருணித்து நடந்து கொள்ள எதிர்பார்ப்பார்கள்.