ஆஸ்கர் விருதெல்லாம் என் கால் விரலுக்கு சமம்!! சர்ச்சையை கிளப்பும் பிரபல நடிகர்!!

Photo of author

By CineDesk

ஆஸ்கர் விருதெல்லாம் என் கால் விரலுக்கு சமம்!! சர்ச்சையை கிளப்பும் பிரபல நடிகர்!!

ஏ ஆர் ரகுமான் இவர் புகழ்பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழி திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். மேலும் இவரை இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் என்று ரசிகர்கள் அழைத்துவருவது வழக்கம். மேலும் இவர் ஆஸ்கர் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசிய திரைப்பட விருது போன்ற புகழ்பெற்ற விருதுகளை வாங்கியுள்ளார். மேலும் ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனர் என்ற ஆங்கில திரைப்படத்திற்காக இசையமைத்து அதற்காக ஆஸ்கர் விருதுகளையும் வென்று இருக்கிறார்.

மேலும் இந்த திரைப்பட இசைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டு கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது கிடைத்தன. இவ்விரு விருதுகளையும் பெற்ற முதலாவது இந்தியரும் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் தான். மேலும் இவருக்கு 2010-ஆம் ஆண்டில் இந்திய அரசின் பத்மபூஷன் விருது அளிக்கப்பட்டது. இவர் ஆசியாவின் மொசார்ட் என்று அழைக்கப்படுகிறார். 2009 ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகளுக்கான அமைந்த மாபெரும் மேடையில் அவரது தாய்மொழியான தமிழில் எல்லா புகழும் இறைவனுக்கே என்று அவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரச் சொல்லை பாடினா.ர் 2017 ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கி அமெரிக்க தமிழ் சங்கம் கௌரவித்தது. இப்படிப்பட்ட இசை ஜாம்பவானை ஏ ஆர் ரகுமான் யார் என்று எனக்கு தெரியாது என்று பிரபல நடிகர் ஊடகத்தின் முன்னாள் கூறியிருக்கிறார்.

தற்போது இது பெரும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா ஒரு தனியார் தெலுங்கு ஊடகத்தில் பேட்டியளித்த போது இப்படி கூறியிருக்கிறார். அந்த ஊடக பேட்டியில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பற்றி கேட்டிருந்த கேள்வியில் அவர் கூறிய பதில், அவர் ஆஸ்கர் விருதுகளை வாங்கி இருக்கலாம் ஆனால் அவர் யாரென்றே எனக்குத் தெரியாது. என்றும் பாரத ரத்னா போன்ற விருதுகளை விருதுகள் என்.டி.ஆரி-ன் கால் விரலுக்கு சமம் என்று கூறியுள்ளார். எந்த ஒரு உயரிய விருதும் தன்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது. என்றும் அவர் ஊடக பேட்டியில் துணிச்சலாக கூறியிருந்தார். மேலும் பாலகிருஷ்ணா தன் படத்துக்காக இசைப்புயல் ஏ.ஆர். ரகுமானை அணுகியதாகவும் அதற்கு அவர் மறுத்ததால் தான் இவர் அந்த  கழிப்புணர்ச்சியில் இப்படி தரக்குறைவாக பேசி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஊடகத்திற்கு அளித்த பேட்டி வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. பாலகிருஷ்ணா இப்படி பேசி இருப்பதை கண்டு ரசிகர்கள் மற்றும் சமூக  ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.