இன்று (செப்.26) இந்திய நேரப்படி 2:14:39 மணி அளவில் இந்திய-சீன எல்லைப் பகுதியான லடாக்கில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய புவியியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை இந்திய எல்லைப் பகுதியான லடாக்கில் ஏற்பட்டுள்ள மூன்றாவது நிலநடுக்கம் ,எதுவென்று தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் மையம் தகவல் தெரிவிக்கின்றனர்.இந்த நிலநடுக்கத்தினால் மக்கள் அச்சம் காரணமாக தங்களது வீட்டை விட்டு வெளியேறினர்.
இதற்கு முன்னதாக நேற்று(செப்.25) இந்திய நேரப்படி 16:27:06 மணி அளவில் 5.6 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.பின்னர் இந்திய நேரப்படி 17:29:05 மணி அளவில் 3.6 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
https://twitter.com/NCS_Earthquake/status/1309599523803545600?s=20