இந்த நான்கு தாரக மந்திரத்தை பயன்படுத்தினால் கருவளையத்திற்கு பாய் பாய் தான்!

Photo of author

By Rupa

இந்த நான்கு தாரக மந்திரத்தை பயன்படுத்தினால் கருவளையத்திற்கு பாய் பாய் தான்!

பெண்கள் மற்றும் ஆண்கள் பெரும்பான்மையோருக்கு கருவளையம் இருப்பது இயல்பு. இதை நினைத்து பலர் வருந்துவதும் உண்டு. நவீன உலகில் அதிக அளவு செல்போன் லேப்டாப் போன்றவற்றை அதிக நேரம் உபயோகிப்பதால் இந்த பிரச்சனை அனைவருக்கும் வந்துவிடுகிறது.

சீரான தூக்கமின்மையாலும் பிரச்சனை உண்டாகிறது. இந்த பிரச்சனையிலிருந்து விடுபட இந்த நான்கு வழிகளை பின்பற்றினாலே கருவளையத்திற்கு பாய் பாய் சொல்லிவிடலாம்.

முதலாவதாக கணினி செல்போன் புத்தகம் போன்றவற்றை பார்க்கும் பொழுது கண்ணிற்கு சிரமம் ஏற்படும் வகையில் உற்று பார்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவ்வாறு கூர்ந்து பார்க்கையில் கண்ணிற்கு சோர்வு ஏற்பட்டு விடும்.

இரண்டாவதாக அதிகளவு தண்ணீர் அருந்த வேண்டும்.

மூன்றாவதாக நம் வீட்டில் இருக்கும் அபூர்வ மூலிகையில் ஒன்று புதினா. இவற்றின் சாற்றை எடுத்து கண்ணின் மேல் தடவி வருவதால் விரைவில் அதற்கான பலனை காண முடியும்.

நான்காவதாக உருளைக்கிழங்கு சாற்றையும் கண்களின் மேல் தடவி வர விரைவில் கருவளையம் குறையும்.