இந்த வயது குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம்! அரசின் அதிரடி உத்தரவு!
கொரோனா தொற்றானது உலக நாடுகள் அனைத்தையும் பெருமளவு பாதித்தது. அத்தொற்றிலிருந்து பொதுமக்கள் தற்பொழுது தான் மீண்டு வந்து உள்ளனர்.அவ்வாறு மீண்டு வந்தாலும் இன்றளவும் சிறிதளவு அதன் தாக்கம் இருந்து கொண்டே உள்ளது. இதைப்போல உலக மக்கள் அனைவரும் கரோனோ தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்துள்ளனர். இன்றளவும் குழந்தைகளுக்கு என்று கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கவில்லை. அவர்களுக்கான தடுப்பூசிகான ஆராய்ச்சி தொடர்ந்து நடந்து வண்ணமாகவே உள்ளது.இதற்கு முன் அம்மை ,மலேரியா போன்ற தொற்று நோய்கள் உருவாகியது.
அதற்கென்று தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் அனைவருக்கும் செலுத்தி வந்தனர். குறிப்பாக குழந்தை பிறந்த மூன்று மாதத்திற்குள்ளேயே அவர்களுக்கு அம்மை தடுப்பூசி செலுத்தப்படுவது வழக்கம். அதேபோல 18 வயது உடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான ஆய்வு எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது. அதன் முடிவில் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தலாம் என்று மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அதற்கான ஒப்புதல் கேட்டு மருந்து தர கட்டுப்பாடு அமைப்பிற்கு அனுப்பி உள்ளனர்.
அவர்கள் இந்த தடுப்பூசி செலுத்துவதன் மூலம் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா என்பதை கண்டறிய ஐ சி எம் ஆர் அமைப்பிற்கு ஆராய்ந்து கூறும் படி கேட்டுள்ளனர். இந்த வகையில் சீனாவின் குரலை பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. சீனாவில் தற்போது சீனு ஃபார்ம் மற்றும் சீனு வாக் தொடர் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது. அதிகளவு தொற்று பாதிப்பு இருப்பதால் மூன்று வயது குழந்தைகளுக்கு இத் தடுப்பூசியை செலுத்தலாம் என சீன அரசு அதிரடியான உத்தரவை அமல்படுத்தியுள்ளது. அந்தவகையில் ஹூபெய், பூஜியான்,ஹெனான்,சிஜியாங்,ஹுனான் ஆகிய ஐந்து மாகாணங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளனர்.