இனி இவர் தான் கேப்டன்! விராட் கோலி போல இருப்பார் என பிரபல கிரிக்கெட் வீரர் புகழாரம்!

Photo of author

By Parthipan K

இனி இவர் தான் கேப்டன்! விராட் கோலி போல இருப்பார் என பிரபல கிரிக்கெட் வீரர் புகழாரம்!

Parthipan K

இங்கிலாந்து அணிக்கு கேப்டனாக உள்ள பென் ஸ்டோக்ஸ் அணியை விராட் கோலியை போல வழிநடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட் அணியின் கேப்டனான ஜோ ரூட் என்பவரது, மனைவிக்கு இரண்டாவது குழந்தை மிக  விரைவில் பிறக்க உள்ளது. நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவியைப் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை தற்போது ஜோவுக்கு வந்துள்ளது. எனவே அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் தான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக இங்கிலாந்து அணியின் கேப்டனாக பென் ஸ்டோக்ஸ்  அணியை வழி நடத்த போகிறார் என தெரியவந்துள்ளது. இது குறித்து ஜோ ரூட் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்திய கேப்டன் விராட் கோலியை போல ஸ்டோக்ஸ் அணியை வழிநடத்துவார்.

அணியின் துணை கேப்டனாக இருக்கும் சமயத்திலே இவர் சிறந்த கேப்டன் போல் விளங்கினார் என அவர் தெரிவித்துள்ளார். எனவே தமக்கு கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தனது திறமையை ஸ்டோக்ஸ் வெளிப்படுத்துவார் எனவும் ஜோ ரூட் குறிப்பிட்டுள்ளார்.