தலை முடி கருமையாக இருந்தால் அது கூடுதல் அழகை சேர்க்கும்.ஆனால் இன்றைய காலத்தில் பெரும்பாலனோர் தலையில் இளம் வயதிலேயே நரைக்க ஆரம்பித்துவிடுகிறது.தலையில் உள்ள பித்த நரையை கருப்பாக மாற்ற 5 பொருட்கள் சேர்த்த ஹேர் டை பயன்படுத்துங்கள்.
தேவையான பொருட்கள்:
1)கொய்யா இலை
2)சங்குப்பூ
3)செம்பருத்தி பூ
4)மருதாணி
5)அவுரி இலை
6)எலுமிச்சை
7)டீத்தூள்
பயன்படுத்தும் முறை:
டீத்தூள் மற்றும் எலுமிச்சம் பழம் தவிர மற்ற பொருட்களை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
10 கொய்யா இலை,ஒரு கைப்பிடி சங்குப்பூ,10 செம்பருத்தி இதழ்,கால் கைப்பிடி மருதாணி இலை மற்றும் கால் கைப்பிடி அவுரி இலையை வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக்க கொள்ளுங்கள்.தொட்டால் மொருமொரு பாதத்தில் அனைத்து இருக்க வேண்டும்.அவ்வாறு இருந்தால் மட்டும் அரைக்க சுலபமாக இருக்கும்.
காய வைத்த பொருட்கள் அனைத்தையும் மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.இதை ஈரமில்லாத டப்பாவில் கொட்டி பாதுகாப்பதால் ஒரு மாதம் வரை பயன்படுத்த முடியும்.
இப்பொழுது அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடு படுத்தவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி டீத்தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து ஒரு கிண்ணத்தில் வடிகட்டி கொள்ளவும்.
பிறகு தயாரித்து வைத்துள்ள ஹேர் டை பவுடர் இரண்டு தேக்கரண்டி அளவு சேர்த்து கலந்துவிடவும்.இறுதியாக சிறிது எலுமிச்சம் பழ சாறை அதில் பிழிந்து 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
இந்த முறையை பின்பற்றினால் இயற்கையான ஹேர் டை கிடைக்கும்.இதை தலை முழுவதும் குறிப்பாக வெள்ளை முடி அதிகமாக தென்படும் இடத்தில் அப்ளை செய்து ஒரு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
பிறகு குளிர்ந்த நீரில் ஷாம்பு பயன்படுத்தி முடியை அலசவும்.இவ்வாறு செய்வதால் வெள்ளை முடி கருமையாக மாறும்.