இனி 15000 இல்லை 7500 மட்டுமே! முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Photo of author

By Rupa

இனி 15000 இல்லை 7500 மட்டுமே! முதல்வர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

கொரோனா தொற்றானது இரண்டு ஆண்டுகளாக அனைத்து நாடுகளையும் வாட்டி வதைத்து வருகிறது.இந்நிலையில் முதல் அலையில்  இந்தியா அதிகப்படியான முன்னெச்சரிக்கையுடன் இருந்ததால் என்னவோ உயிர்சேதம் அந்த அளவிற்கு ஏதும் நடைபெறவில்லை.அதனையடுத்து ஒரு வருட காலமாக முதல் அலையின் போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.அவ்வாறு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தொற்றானது குறைய தொடங்கியது.

மக்கள் அரசாங்கம் கூறிய விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் முதல் அலையில் தளர்வுகளற்ற ஊரடங்கு காலத்தில் நடந்து கொண்டனர்.அதன் விளைவாக இரண்டாம் அலையில் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது.அப்போது மக்கள் ஆக்சிஜன் இன்றியும் மருத்துவமனைகளிலும் இன்றியும் பெருமளவு அவதிக்குள்ளானார்கள்.அரசாங்கம் அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்குள் தொற்றின் பாதிப்பு அதிகரித்து  சிகிச்சை பலனின்றி பல உறவுகளை இழக்கும் நிலை ஏற்பட்டு விட்டது.

தற்போது மூன்று வது அலை வரும் என மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.இச்சமயத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னேற்பாடுகளுடன் உள்ளது.அந்தவகையில் சென்ற முறை தனியார் மருத்துவமனையில்கொரோன தொற்று நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து மருத்துவ காப்பீட்டு திட்டத்தை உபயோகம் செய்யும் போது ஆக்சிஜன் கூடிய சிகிச்சைக்கு தினமும் ரூ 15 செலுத்துவதாக இருந்தது.

தற்பொழுது அவற்றிலிருந்து குறைத்து 7500 ஆக முதல்வர் மு.க ஸ்டாலின் மாற்றியமைத்துள்ளார்.வரும் காலங்களில் தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்கள் ரூ 7500 மட்டுமே கட்டினால் போதுமானது எனக் கூறியுள்ளனர்.அந்த வகையில் மக்கள் நல்வாழ்வு துறை விவரமான ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

அதில் அவர்கள் கூறியது, ஆரம்பகட்ட காலம் கரோனா சிகிச்சைக்கு ஒரு நாள் ஒன்றுக்கு ரூ 5000 என்று தமிழக அரசு நிர்ணயம் செய்துள்ளது.அதேபோல அவசர பிரிவான ஆக்சிஜனுடன் கூடிய கரோனா சிகிச்சைக்கு நாளொன்றுக்கு 7500 ஆக குறைத்துள்ளனர்.அதேபோல வென்டிலேட்டர் இல்லாமல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தால் நாளொன்றுக்கு 25 ஆயிரம் என்றும் நிர்ணயித்துள்ளனர்.சுவாச செயலிழப்பு ஏற்பட்டு வென்டிலேட்டர் தேவையில்லை என்றால் அதற்கு கட்டணம் 27 ஆயிரத்து 500 என்று கூறியுள்ளனர்.