இன்று முதல் திறக்கப்படும் டாஸ்மாக்! படுகுஷியில் குடிமகன்கள்

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் ஜூன் மாதம் 21ஆம் தேதி தொடங்கி தரவுகளுடன் கூடிய ஓர் அணங்கு நீட்டிக்கப்பட்ட இருக்கிறது அதன்படி இந்த முதல் முடி திருத்தும் கடைகள் அழகு நிலையங்கள், தேநீர் கடைகள், காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கடுமையான கட்டுப்பாடுகள் தமிழ்நாட்டில் அமல்படுத்த பட்டதை அடுத்து தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவாமல் படிப்படியாக குறைந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், இதற்கு முன்னரே அமலில் இருந்துவரும் ஊரடங்கு இன்றைய தினம் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு இந்த ஊரடங்கு நீட்டிப்பு குரித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதோடு பல தளர்வுகளையும் அறிவித்து இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதன்படி நோய்த் தொற்று அதிகம் இருக்கின்ற 11 மாவட்டங்களை தவிர்த்து விட்டு மற்ற 27 மாவட்டங்களில் இன்னும் பல தளர்வுகளை அறிவித்து ஊரடங்கு அமல் படுத்தி இருக்கிறது தமிழக அரசு.

அதன்படி இன்று முதல் தமிழ்நாட்டில் இருக்கின்ற முடி திருத்தும் கடைகள், தேநீர் கடைகள், அழகு நிலையங்கள் மற்றும் இனிப்பு பலகாரம் போன்ற கடைகளில் இ சேவை மையங்கள் மற்றும் டாஸ்மாக் கடைகளை வைத்திருப்பதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது தமிழக அரசு. நோய்த்தொற்று அதிகம் இருக்கின்ற கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம் திருப்பூர் நாமக்கல் கரூர் தஞ்சை திருவாரூர் நாகை மயிலாடுதுறை போன்ற 11 மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் சலூன் கடைகள் மற்றும் டாஸ்மாக் கடை உள்ளிட்டவைகளை திறக்க அனுமதி கிடையாது என்று அறிவித்து இருக்கிறது தமிழக அரசு.

இந்த சூழ்நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்கும்போது பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மதுக்கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் நோய்த் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும். டாஸ்மாக் கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்பு வேலிகள் அமைக்கப் பட்டிருக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.A