இப்படியும் ஒரு நாடு இருக்குமா? பொய் செய்திகளை பரப்பி முதலிடம் பெற்ற நாடு ?அதிர்ச்சியில் மக்கள்!..
இன்றைய உலகத்தில் பொய்யான செய்திகள் அதிகரிக்க தொடங்கி விட்டது.இதையும் நம்பி பல மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றார்கள்.இதில் முதன்மை வகிக்கிறது நாட்டின் ஒரு பகுதியான மேற்கு வங்கம் நாடு தான்.இந்த நாட்டில் மட்டும் சமூக வலைதளங்களில் உருவாகும் பொய் செய்திகள் தொடர்பாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு பதிவான வழக்குகள் குறித்து தேசிய குற்ற ஆவணகாப்பகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் கூறப்பட்டிருப்பதாவது,கடந்த ஆண்டில் தான் மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது.இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை முடித்தது.
இந்நிலையில் இந்த தேர்தலையொட்டி சமூக வலைதளங்களில் அதிகமான செய்திகள் வெளியிட்டப்பட்டன.இந்த காங்கிரஸ் கட்சியின் செய்திகள் சிலது மட்டும் பொய்யான செய்திகள் பரப்பியதாக புகார் அளிக்கப்பட்டது.அதுமட்டுமல்லாமல் பொய்செய்திகளை பரப்பியவர்களின் மீதும் வழக்கு பதிவு போடப்பட்டது.
நம் நாட்டிலே அதிக அளவு மேற்கு வங்கத்தில் தான் பொய் செய்தி வெளியிட்டதாக 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது .மேலும் இது குறித்து ஜாதவ்பூர் பல்கலை ஊடகத்துறை பேராசிரியர் சடோபாத்யாயா கூறியதாவது, சமூக வலைதளங்களில் பொய் செய்தி வெளியாவது கவலைப்பட வேண்டிய செயல் தான்.
ஆனால் எனக்கு இது ஒன்றும் ஆச்சரியம் அளிக்கவில்லை .இந்நிலையில் இதற்கு ஒரு தீர்வு காண வேண்டிய செயலாக இருந்தாலும் தார்மீக அடிப்படையில் இவற்றை அணுக வேண்டடும் .பொய் செய்திகளை வெளியாவதை தடுக்க கட்டமைப்பு உருவாக்க வேண்டும்.
எனவே பொய் செய்திகளை மக்கள் எளிதில் அடையாளம் காணும் வகையிலான கட்டமைப்பை ஏற்படுத்துவது மிகவும் அவசியம் என அவர் கூறினார்.எனவே மக்கள் அனைவரும் பொய் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என தெரிவித்தார்.