இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் இந்த தேதிக்குள் நடைபெறும்!! சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு செமஸ்டர் தேர்விகளை வரும் 21-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என சென்னை  பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில், இறுதி செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட மாட்டாது என்று யுஜிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இறுதியாண்டு பயிலும் மாணவர்களை செமஸ்டர் தேர்வுகளை தவிர மற்ற அனைத்து பருவத்தேர்வுகளுக்கும் தடைவிதித்து உத்தரவிட்டது. யுஜிசி தரப்பில் இறுதி பருவ தேர்வினை கட்டாயம் நடத்தப்பட்டு பட்டம் வழங்க வேண்டும் என்று கூறியது.

அந்த வகையில் தற்பொழுது இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் குறித்து தேர்வு அட்டவணை ஒன்றினை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதில் இறுதி செமஸ்டர் தேர்வுகள் வரும் 21-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் 14-ஆம் தேதி மாலையில் வெளியிடப்படும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தமிழக மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வருகை தந்து தேர்வை எழுத வேண்டும் என்றும் வெளிநாடு அல்லது வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்து பயிலும் மாணவர்கள் இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் வகையில் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்றும் அதில் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்த தேர்வு மாணவர்கள் தேர்வு எழுத ஆன்லைன் மூலமாக தேர்வு எழுதுவது குறித்து கோரிக்கை வைத்தால் அவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சென்னை பல்கலைகழகம் அறிவித்துள்ளது.