உங்களுக்கு புரதச் சத்து அதிகம் தேவையா? இந்த பருப்பு வகைகளை சாப்பிடுங்க! 

Photo of author

By Sakthi

உங்களுக்கு புரதச் சத்து அதிகம் தேவையா? இந்த பருப்பு வகைகளை சாப்பிடுங்க!
ஒவ்வொரு மனிதருக்கும் உடலில் புரதச் சத்து என்பது இன்றியமையாத ஒன்று. அவ்வாறு நம்முடைய உடலுக்கு தேவைப்படும் இன்றியமையாத புரதச் சத்துக்களை அள்ளிக் கொடுக்கும் சில பருப்பு இந்த வகைகளை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நம்முடைய உடல் எடையை குறைப்பது முதல் உடலில் உள்ள தசைகளை வலிமையாக்குவது வரையிலான அனைத்து செயல்களுக்கும் புரதச் சத்து என்பது தேவைப்படுகின்றது. இந்த புரதச் சத்துக்கள் மற்ற உணவுகளை காட்டிலும் பகுப்பு வகைகளில் அதிகமாக காணப்படுகின்றது.
பருப்பு வகைகளை சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்கு புரதச் சத்துக்கள் மட்டுமின்றி தாதுக்களும், வைட்டமின்களும் கிடைக்கின்றது. பருப்பு வகைகள் தான் புரதச் சத்துக்களின் முக்கிய ஆதாரம். அவ்வாறு புரதச் சத்துக்களின் முக்கிய ஆதாரமாக விளங்கும் சில பருப்பு வகைகள் பற்றி இங்கு காணலாம்.
புரதச் சத்துக்களை அள்ளித் தரும் பருப்பு வகைகள்…
ராஜ்மா:
ராஜ்மா என்பது ஒன்றும் இல்லை. பீன்ஸ் தான் ராஜ்மா என்று அழைக்கப்படுகிறது. இது பலருக்கும் மிகவும் பிடித்த உணவாக இருக்கின்றது. இதில் பல ஆரோக்கியம் நன்மைகள் இருக்கின்றது. இதில் அதிக அளவில் புரதச் சத்துக்கள் இருக்கின்றது.
துவரம் பருப்பு:
புரதச் சத்துக்கள் நிறைந்த பருப்பு வகைகளில் துவரம் பருப்பும் ஒன்று. துவரம் பருப்பு சாம்பார் முதல் பல உணவுகள் தயார் செய்ய பயன்படுகின்றது. துவரம் பருப்பை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு அதிக அளவில் புரதம் கிடைக்கும்.
சோயா பீன்ஸ்:
சோயா பீன்ஸ் சாப்பிடுவதால் நம்முடைய உடலுக்கு புரதச் சத்துக்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் தாத்துக்களும் விட்டமின்களும் கிடைக்கின்றன. இது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
பாசிப்பருப்பு:
பாசிப்பருப்பு புரதச் சத்துக்களின் முக்கிய மூலமாகும். பாசிப்பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான அளவு புரதம் கிடைக்கும். பாசிப் பருப்பை இட்லி, தோசை, பொங்கல், கிச்சடி போல தயார் செய்து சாப்பிடலாம்.
உளுத்தம் பருப்பு:
உளுத்தம் பருப்பில் உடலுக்குத் தேவையான அளவு புரதம் இருக்கின்றது. இட்லி மற்றும் தோசை ஆகிய உணவுகளில் உளுத்தம் பருப்பு மிகவும் பயன்படுகின்றது. உளுத்தம் பருப்பை சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் நம்முடைய உடலுக்கு கிடைக்கின்றது.
மசூர் பருப்பு:
மசூர் பருப்பில் புரதம் மட்டுமில்லாமல் நான்ச்சத்துக்கள் போன்ற பலவகையான சத்துக்கள் இருக்கின்றது. இந்த பருப்பை சாப்பிடுவதால் நம்முடைய உடலை பல நோய்களில் இருந்து பாதுகாத்துக் கெள்ளலாம்.
கொண்டைக் கடலை:
கொண்டைக் கடலையில் கருப்பு மற்றும் வெள்ளை என்று இரண்டு வகை உள்ளது. கொண்டைக் காலையில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றது. இதை சாப்பிடுவதால் நம்முடைய உடலில் உள்ள புரதச் சத்துக்கள் அதிகரிக்கின்றது.