சளி மற்றும் இருமலை விரட்ட என்ன செய்யலாம்..?

0
90

சளி மற்றும் இருமலை விரட்ட என்ன செய்யலாம்..?

உடலின் வெப்பநிலை மாறும்போது சளி, இருமல் போன்ற பிரச்சினைகள் உருவாகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் உடல் அதிகம் குளிர்ச்சியாவதால் காய்ச்சல் வருகிறது. காய்ச்சலுடன் சளியும், இருமலும் சேர்ந்தே வருகிறுது. இருமல் வந்தால் இரும்பு உடம்பும் இளைத்துவிடும் என்பார்கள். இவற்றை தடுக்கும் வழிமுறைகளை காண்போம்.

  • கொதிக்க வைத்த பாலில் மஞ்சளை சேர்த்து குடித்தால் சளி மற்றும் இருமல் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த எளிய மருத்துவத்தை பயன்படுத்தலாம்.
  • தொண்டையில் ஏற்படும் உள்ளுறுப்பு பிரச்சினையின் காரணமாக வறண்ட இருமல் ஏற்படுகிறது. துளசி இலை அல்லது துளசி தீர்த்தம் இருமல் மற்றும் சளித் தொல்லைக்கு நல்ல தீர்வாக இருக்கிறது.
  • சளி வந்தால் வெந்நீர் குடிக்க வேண்டியது மிக முக்கியமான ஒன்றாகும். ஆட்டுக்கால் சூப் சளித்தொல்லைக்கு நல்ல பலன் தருகிறது. சூப் குடிக்கும் போது பெப்பர் அதிகமாக சேர்த்துக் கொண்டால் விரைவில் சளிப் பிரச்சினை நீங்கும்.
  • தேன் இருமலை போக்க உதவுகிறது. தேனில் இருக்கும் டெக்ஸ்ரோ
    மெத்தோர்பான் என்னும் இயற்கை மருந்து இருமலுக்கு நல்ல நிவாரணியாக உள்ளது. வெந்நீருடன் தேன்கலந்து குடித்தாலும் இருமலை விரட்டலாம்.
  • மிளகு அல்லது மிளகுத்தூளை டீயை போன்று கொதிக்க வைத்து குடித்தால் இருமல் மற்றும் சளிக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
  • இருமல் போன்ற வியாதிகள் வரும்போதே குணமாக்க மசாலா டீ குடித்தால் இருமல் வராமல் தடுக்கலாம். கிராம்பு பொடி, இஞ்சி பொடி மற்றும் பட்டை பொடி ஆகியவற்றை கொதிக்க வைத்து இதமான சூட்டில் குடித்தால் சளி என்ற பிரச்சினையே வராது.
  • மேலே சொன்ன வழிமுறைகளால் உங்கள் தொண்டைப் பகுதி மற்றும் நுரையீரல் பகுதிகளில் இருக்கும் சளி நிரந்தரமாக நீங்கிவிடும். இருமல் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும்.

குறிப்பு : சளி, இருமல் நோய்கள் வரும் அறிகுறி தெரிந்தாலே வெந்நீரை பருகவும். நோய் வருமுன் காப்போம்.

author avatar
Jayachandiran