உடலில் ஏற்படும் வலிகளுக்கு இந்த எண்ணெயின் ஒரு சொட்டு போதும்!!

Photo of author

By Sakthi

உடலில் ஏற்படும் வலிகளுக்கு இந்த எண்ணெயின் ஒரு சொட்டு போதும்!!

நம் உடலில் ஏற்படும் கழுத்து வலி, தசை வலி, கால் வலி, கை வலி, சதைப் பிடிப்பு, பாத எரிச்சல், நரம்பு இழுத்தல், மூட்டு வலி வீக்கம், எலும்பு தேய்மானம் போன்ற பல வலிகளை பிரண்டை செடியை வைத்து குணமாக்கலாம்.

அது எப்படி பிரண்டை செடியை வைத்து இவ்வளவு நோய்களை குணமாக்க முடியும் என்ற கேள்விக்கு இந்த பதிவில் அற்புதமான பதில் உள்ளது. பிரண்டை செடியை வைத்து உடலில் ஏற்படும் வலிகளை எவ்வாறு மருந்தாக பயன்படுத்தி சரி செய்யலாம் என்று பார்க்கலாம்.

பிரண்டை செடியில் அதிகம் கால்சியம் சத்துக்கள் இருக்கின்றது. இதனால் எலும்புக்கு தேவையான வலிமையை இது கொடுக்கின்றது. உடைந்த எலும்பையும் ஒட்ட வைக்கக் கூடிய தன்மை இந்த பிரண்டை செடிக்கு உள்ளது. நம் உடலில் ஏற்படும் பல வலிகளை இந்த பிரண்டையில் எண்ணெய் தயாரித்து அதை வலிகளுக்கு பயன்படுத்தி குணப்படுத்தலாம்.

தயார் செய்ய தேவையான பொருள்கள்

* பிரண்டை – 200 கிராம்

* புளி – எட்டு கொட்டை பாக்கு அளவு

* எலுமிச்சம்பழம் – அரை பழம்

* பூண்டு – 5 பல்(தட்டியது)

* ஓமம் – 1 டேபிள் ஸ்பூன்

* பிரண்டை இலைகள்

* நல்லெண்ணெய் – 200 மிலி

* பச்சை கற்பூரம்

பிரண்டைய் எண்ணெய் தயாரிக்கும் முறை:

பிரண்டை சிறிது அரிப்புத் தன்மையை கொடுக்கும். அதனால் கையில் சிறிது எண்ணெய் தடவிக் கொள்ளவும். பிறகு எடுத்து வைத்துள்ள பிரண்டைகளில் இருக்கும் இலைகளை மட்டும் எடுத்து தனியாக வைக்க வேண்டும். பிறகு பிரண்டையை மட்டும் சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்.

பிறகு இரும்பு கடாய்(வடசட்டி) ஒன்றை அடுப்பை பற்ற வைத்து அதில் இரும்பு கடாய் வைக்க வேண்டும். பிறகு நறுக்கி வைத்துள்ள பிரண்டை துண்டுகளை அந்த கடாயில் போட்டு 5 நிமிடம் வதக்க வேண்டும். பிறகு எடுத்து வைத்துள்ள நல்லெண்ணெயை இதில் சேர்க்க வேண்டும்.

ஒரு மூன்று நிமிடம் வதக்கிக் கெள்ளவும். பிறகு இதில் எடுத்து வைத்துள்ள பூண்டு, ஓமம், பிரண்டை இலைகள், புளி என எல்லா பொருள்களையும் சேர்த்துக் கலக்கிக் கொள்ளவும். எலுமிச்சம் பழத்தை கடைசியாக சேர்க்க வேண்டும்.

மூன்று நிமிடம் நன்கு கொதித்த பிறகு எலுமிச்சம் பழச் சாறை இதில் சேர்த்துக் கொள்ளவும். எலுமிச்சம் பழம் சேர்த்த பிறகு இதை நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். இதில் இருந்து எண்ணெய் மட்டும் தனியாக வரும்.

பிறகு இதை இறக்கி விட வேண்டும். இறக்கிய பின்னர் இதில் பச்சை கற்பூரத்தை சேர்த்து ஆற வைக்க வேண்டும். நன்கு ஆறிய பிறகு இதை கண்ணாடி பாட்டிலில் வடிகட்டி எடுத்துக் கொள்ளலாம்.

பிரண்டை எண்ணெய் பயன்படுத்தும் முறை:

இதை இரவு தூங்கச் செல்லும் முன்பு பயன்படுத்த வேண்டும். இந்த எண்ணெயில் சிறிதளவு எடுத்துக் கொண்டு வலி உள்ள இடத்தில் தேய்க்க வேண்டும். இதை தொடர்ந்து இரண்டு வாரம் செய்து வந்தால் மேற்கூறிய எந்தவொரு வலியும் நமக்கு இருக்காது.