உயிருடன் நிர்வாணமாக மூதாட்டியை வாய்க்காலில் வீசிய மர்ம நபர்கள்!

Photo of author

By Kowsalya

உயிருடன் நிர்வாணமாக மூதாட்டியை வாய்க்காலில் வீசிய மர்ம நபர்கள்!

Kowsalya

தஞ்சாவூர் மாவட்டத்தில் உயிருடன் நிர்வாணமாக அங்கு யாசகம் எடுத்துப் அந்த மூதாட்டியை வாய்க்காலில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி பகுதியில் மிகவும் வயது முதிர்ந்த மூதாட்டி ஒருவர் அங்கிருந்த பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

 

ஊரடங்கு காலத்தில் யாரும் வராத நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு வந்த மூதாட்டி கடந்த இரண்டு நாட்களாக பசியால் அந்த பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் விழுந்து கிடந்துள்ளார்.

 

இந்நிலையில் அங்கிருந்த யாரோ சில பேர் மூதாட்டியை ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக அங்குள்ள வாய்க்கால்களில் வீசிச் சென்றுள்ளனர்.

 

இதையடுத்து அந்த வாய்க்காலில்வழியாக சென்ற பொதுமக்கள் அங்கு ஆடை இல்லாமல் மூதாட்டி ஒருவர் நிர்வாணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

 

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியை மீட்கும் முயற்சி செய்யும் பொழுதுதான் மூதாட்டிக்கு உயிர் இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

 

இதன் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். யார் இந்த காரியத்தை செய்தது? எதற்காக செய்தார்கள்? ஆடை இல்லாமல் இருப்பதால் வேறு அசம்பாவிதம் நடந்திருக்குமா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.