உருக்குமாக கடிதம் எழுதிய கமல்! தோல்வி பயத்தில் இவ்வாறு செய்துள்ளார் என எதிர் கட்சியினர் விமர்சனம்!
சட்டமன்ற தேர்தலானது மொத்தம் 5 மாநிலங்களில் நடக்கப்போகிறது.இந்த 5 மாநிலங்களில் புதுச்சேரி,தமிழ்நாடு,கேரளா போன்ற மாநிலங்களில் ஒரே நாளில் வாக்கு பதிவுகள் தொடங்குகின்றனர்.அந்தவகையில் அந்த 5 மாநிலங்களிலும் அனல் பரக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது.முதலில் தேர்தல் தேதியானது பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி நடைபெற்றது.அதனையடுத்து வேட்புமனு தாக்கல் மார்ச் 12 நடைப்பெற்று மார்ச் 19 ஆம் தேதி நிறைவடைந்தது.மார்ச் 20 தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது.அதன்பின் வேட்புமனு திரும்ப பெரும் நாள் 2 ம் தேதியான மாலை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகளில் மொத்தம் 3998 பேர் போட்டியிடுகின்றனர்.
அதில் 3,585 ஆண் வேட்பாளர்களும்,411 பேர் பெண் வேட்பாளர்களும்,2 இதர பாலினத்தினரும் வேட்பாரளராக போட்டியிடுகின்றனர்.இந்த வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாளில் இருந்தே தேர்தல் திருவிழா தொடங்க ஆரம்பித்துவிட்டது.அதுமட்டுமின்றி இரு மூத்த தலைவர்கள் இன்றி நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுவே ஆகும். இரும் பெரிய ஆட்சிகள் தன்னுடன் கூட்டணி கட்சிகளை வைத்துக்கொண்டு ஆட்சியை பிடிப்பதற்கு தேர்தலில் போட்டியிட்டு வருகிறது.இவர்களுக்கு நடுவில் இவர்களுடன் இணையாத பல நடுநிலைக் கட்சிகளும் உள்ளனர்.
அதில் ஒன்று தான் மக்கள் நீதி மய்யம்.இவர் கோவையில் பரப்புரை ஆற்றும்போது பல முறைகளில் மக்களிடம் வாக்குகள் கேட்டார்.அது என்னவென்றால்,பேருந்துகளிலும் செல்வதும்,மக்களோடு மக்களாக தேநீர் அருந்துவதும் என பல முறைகளை கையாண்டார்.இவரை எதிர்த்து போராடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் மற்றும் கமல் இருவரும் ஆட்டோவில் சென்று போட்டிப்போட்டு வாக்குகளை சேகரித்தனர்.
அந்தவகையில் கமல் கோவை தெற்கு தொகுதி வேட்பாளர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பது,கோவை தெற்கு தொகுதி தேர்தல் நேர்மையாகவும்,அமைதியாகவும்,வெளிப்படையாகவும் நடக்க வேண்டும்.யார் வென்றால் நல்லது என மக்கள் நினைக்கிறார்களோ அவர்கள் வெல்லட்டும் எனக் அக்கடிதத்தில் குறிபிட்டுள்ளார்.இவ்வாறு அவர் கடிதம் எழுதியது தோல்வி பயத்தால் தான் என்று எதிர்கட்சியினர் கூறிவருகின்றனர்.