கோவையை சேர்ந்த பள்ளி மாணவி விளையாட்டு போட்டிக்கு சென்றுவிட்டு ஜி.டி.எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பும்போது சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார். பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
ரயிலில் வழங்கப்படும் உணவுகள் தரம் இல்லாமல் இருக்கிறது என பல குற்றச்சாட்டுகள் வருகிறது. அதனை தொடர்ந்து சமீபத்தில் ரயிலில் வழங்கப்பட்ட உணவில் வண்டு இருப்பதாக கூறி ஒரு புகார் எழுந்தது. ஆனால் அது சீரகம் என சமாளித்தாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கோவையை சேர்ந்த 15 வயது சிறுமி எலினா லாரட் பள்ளிகளுக்கு இடையே நடந்த கூடைபந்து போட்டிகளில் கலந்து கொண்டு மத்திய பிரதேசம் மாநிலம் சென்று பின் விளையாட்டு போட்டி முடிந்த பிறகு வீடு திரும்ப ஜி.டி.எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்துள்ளார்.
அப்போது வீடு திரும்பும் வழியில் ஜி.டி.எக்ஸ்பிரஸ் ரயிலில் சிக்கன் ரைஸ் வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து மாணவிக்கு உடல் நலம் பாதிப்படைந்துள்ளது. இதனை அறிந்த அவரது உறவினர்கள் எலினா லாரட் -டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை முடிந்த பிறகு வீடு திரும்பிய சிறுமிக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.
இதற்கு காரணம் ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் என உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். மேலும் மக்கள் அனைவரும் ரயிலில் பயணம் செய்கிறார்கள். அவர்களுக்கு தரமான உணவுகளை வழங்க வேண்டும் என கூறப்படுகிறது. மேலும் தரமான உணவை வழங்காத நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கேட்டுக்கொள்கின்றனர்.