என்ன மருந்து எடுத்தும் மருக்கள் மறையவில்லையா! இதற்கு ஒரே ஒரு பூண்டு மட்டும் போதும்! மருக்கள் மறைந்து விடும்!
நம்மில் பலருக்கும் உடலில் மருக்கள் இருக்கும். இந்த மருக்களை நீக்க நாம் பலவிதமான ஆங்கில மருந்துகளை பயன்படுத்தி இருப்போம். பல நாட்டு வைத்திய மருந்துகளையும் பயன்படுத்தி இருப்போம். பல சிகிச்சை முறைகளையும் எடுத்திருப்போம். ஆனால் பலன் தந்திருக்காது. இந்த பதிவில் அந்த மருக்களை நீக்க என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.
மருக்களை மறைய வைக்க இந்த பதிவில் பூண்டு வைத்து மருந்து தயாரித்து எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளலாம். பூண்டுடன் சேர்த்து எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து பயன்படுத்த வேண்டும். இதை எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.
மருக்களை மறைய வைக்க மருந்து தயாரிக்க தேவையான பொருள்கள்…
* பூண்டு
* பேக்கிங் சோடா
* எலுமிச்சை சாறு
மருந்தை தயாரிக்கும் முறை;
வெள்ளை பூண்டு 7 பற்கள் எடுத்து தோல் நீக்கி வைத்துக் கொள்ளவும். பிறகு இதை மிக்சி ஜாரில் போட்டு பேஸ்டாக அரைத்து கொள்ளவும். அரைத்த இந்த பூண்டு பேஸ்டை ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளவும். பிறகு இதில் பேக்கிங் சோடா சிறிதளவு கலந்து கொள்ளவும். பின்னர் இதில் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். மருக்களை மறைய வைக்கும் மருந்து தயாராகி விட்டது.
இந்த மருந்தை பயன்படுத்தும் முறை;
தயார் செய்து வைத்துள்ள இருந்த மருந்தை மருக்கள் இருக்கும் இடத்தில் சிறிதளவு பூச வேண்டும். ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விட்டு விடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து இதை கழுவி விடலாம்.
இதைப் போலவே தொடர்ந்து 4 முதல் 5 நாட்கள் இந்த மருந்தை மருக்கள் மீது பூசி வர வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் மருக்கள் மறைந்து விடும்.