எம்ஜி ஆரை உருவாக்கியதே எங்கள் தலைவர் பேனா தான் – திமுக துரைமுருகன்!!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் ஆனது இம்மாதம் நடைபெற போவதையொட்டி அதிமுக திமுக என அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், திமுக அமைச்சர்கள் சரமாரியாக தங்களது பேச்சுக்கள் மூலம் வெற்றி வாகையை சூடி விடலாம் என எண்ணி சரமாரியாக பேசி வருகின்றனர்.
அந்த வகையில் திமுக அமைச்சர்கள் இருவரை தவிர்த்து மீதமுள்ள அனைவரும் தற்பொழுது ஈரோட்டில் தான் குடியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்ற அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டதில் அவர் பேசியதாவது,
தற்பொழுது திமுக காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தி உள்ளனர் என கூறி வருகின்றனர்.ஆனால் இது முற்றிலும் தவறானது இதற்கு மாற்றாக காங்கிரஸ் வேட்பாளரையே திமுக தலைவர் தான் நிறுத்தி உள்ளார் என்று கூற வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளராக இருந்தாலும் அவர்களோடு ஒன்றிணைந்து அனைத்து செயல்களிலும் களத்தில் இறங்க வேண்டும்.
பெரியார் மட்டும் இல்லை என்றால் நாம் அனைவரும் காட்டுமிராண்டிகளாக தான் இருந்திருப்போம், அவர் ஒருவரால் தான் தற்பொழுது இவ்வளவு பெரிய மாற்றம் உண்டாகியுள்ளது என்று கூறினார். பலரும் தற்பொழுது சீர்திருத்தத்தை முன் கொண்டு வந்தாலும் அதில் வெற்றி பெற்றவர் பெரியார் மட்டும்தான் என உறுதியாக கூறினார். அதேபோல முதலமைச்சர்களில் தமிழ்நாடு முதலமைச்சர் தான் நம்பர் ஒன் என கூறி எழுதி உள்ளனர், ஆனால் அவ்வாறு எழுதுவது தவறு நம்பர் ஒன்றாக தமிழ்நாடு இருக்க வேண்டும் என கூறியவர் நமது முதல்வர் என்பதையும் தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களையும் மிஞ்சியவர் தான் நமது முதல்வர் ஸ்டாலின் என்றும் கூறினார்.அதேபோல கலைஞர் அவர்களின் பேனாவை வைப்பது குறித்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் வகையில் குறிப்பாக எதிர்கட்சியினர் பேனாவை வீட்டில் வைக்க வேண்டியதானே என்று கேள்வி எழுப்புகிறார்கள். அதற்கு துரைமுருகன் பதிலடி கொடுக்கும் வகையில் பேனாவை யாரும் வீட்டில் வைக்க மாட்டார்கள் என்று கேலியாக விமர்சனம் செய்தார்.
இந்த பேனா ஏன் நாம் வைக்க வேண்டும் என்றால் தமிழையே உயர்த்தி பிடித்தது இது ஒன்றுதான். அந்த வகையில் அவரது நினைவுச்சின்னமாக கட்டாயம் பேனாவை வைக்க வேண்டும். அதுமட்டுமின்றி சினிமா திரையுலகில் சிவாஜி கணேசன், எம்ஜிஆர் என பலரை உருவாக்கியது இந்த பேனா தான் என்று சரமாரியாக பேசியுள்ளார். தற்பொழுது இது வைரலாகி வருகிறது.