ஒருவரும் ஒத்துழைக்கவில்லை மேலிடத்தில் முறையிட்ட முருகன் தமிழக பாஜகவில் சலகலப்பு
தமிழ்நாட்டின் பாஜக தலைவராக இருந்த தமிழிசை அவர்கள் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் பின்பு தமிழ்நாட்டில் பாஜகவின் தலைவர் பதவி காலியாகவே இருந்தது சமீபத்தில் தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவராக இஉந்த முருகன் அவர்கள் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் பதவிக்கு எச்.ராஜா அவர்கள் நியமிக்கப்படுவார் என அனைத்து தரப்பு ஊடகங்களாலும் பேசப்பட்டது. அவர் இல்லை என்றாலும் அந்த பதவிக்கான போட்டி என்பது பொன்.ராதாகிருஷ்ணன்,கே.டி.ராகவன், வானதி சீனுவாசன், நாகேந்திரன் என பலமுனைப் போட்டி நிலவியது.ஆனால் இவர்களை அனைவரையும் ஒதுக்கி பாஜக தலைமையானது தமிழக மக்களுக்கு அறிமுகமே இல்லாத எல்.முருகன் என்பவரை தலைவராக நியமித்து அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இவர் தலைவராக நியமிக்கப்பட்ட நாள் முதலே இந்த பதவிக்காக போட்டியிட்ட பலரும் மிகுந்த கோபத்திலும் இவருக்கு எந்த வித ஒத்துழைப்பும் வழங்கவில்லை என்று தெரிகிறது. கொரோனோ வைரஸ் பாதிப்பு மிகுதியாக உள்ள இந்த நேரத்தில் மற்ற யாராக இருந்தாலும் மத்திய அரசின் செயல்பாடுகளை மக்களிடையே கொண்டு சென்று இருப்பர். ஆனால் புதிய தலைவரோ இதுவரை ஒரு பேட்டி கூட அளிக்கவில்லை.
இதுகுறித்து மிகுந்த வருத்தத்துடன் தற்போதைய தலைவர் நட்டா அவர்களிடமும் முன்னாள் தலைவர் அமித்ஷா அவரிடமும் முருகன் அவர்கள் தெரிவித்துள்ளார். அவர்கள் பாஜக முன்னோடிகளை அழைத்து விசாரித்தற்கு கொரோனோவை காரணம் காட்டி தப்பித்துள்ளனர். இனி போல நடக்ஙாது எனவும் உறுதியளித்துள்ளனர்.