ஒரே மாதத்தில் ஆண்களின் தாடி மீசை காடு போல் வளரணுமா?? இதோ எளிய வழிமுறை!

Photo of author

By Sakthi

ஒரே மாதத்தில் ஆண்களின் தாடி மீசை காடு போல் வளரணுமா?? இதோ எளிய வழிமுறை!

Sakthi

Updated on:

ஒரே மாதத்தில் ஆண்களின் தாடி மீசை காடு போல் வளரணுமா?? இதோ எளிய வழிமுறை!!

ஆண்களில் பலருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை அவர்களுக்கு தாடி மற்றும் மீசை அடர்த்தியாக வளராமல் இருப்பதுதான். இதற்காக ஆண்கள் பலரும் மருந்து மாத்திரைகள், ஜெல், ஆயில் என பயன்படுத்தியும் தாடி மீசை அடர்த்தியாக வளராமல் இருக்கும்.

 

தாடி மற்றும் மீசை அடர்த்தியாக வளராமல் கவலைபட்டுக் கொண்டு இருக்கும் ஆண்களுக்கு தாடி மற்றும் மீசை அடர்த்தியாக வளர்வதற்கு இந்த பதிவில் அருமையான மருந்தை தயார் செய்து எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

 

தாடி மற்றும் மீசை அடர்த்தியாக வளர்வதற்கு தேவைப்படும் மருந்தை தயார் செய்ய தேவையான பொருள் ஒன்று மட்டும் தான். அந்த பொருள் என்ன என்றால் சிறிய வெங்காயம் மட்டும் தான்.

 

இந்த சிறிய வெங்காய் 10 எடுத்து தோல் உறித்து அதை மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு அதை எடுத்து அதில் இருக்கும் வெங்காயச் சாறை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

இந்த வெங்காயச் சாற்றை இரவு தூங்கச் செல்லும் முன்பு நம் முகத்தில் தாடி மீசை அடர்த்தியாக வளர வேண்டும் என்று நீங்கள் விரும்பும் இடத்தில் தேய்க்க வேண்டும். பிறகு மறுநாள் காலையில் குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவ வேண்டும்.

 

இவ்வாறு தொடர்ந்து 10 நாட்கள் செய்ய வேண்டும். 10 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் தாடி மற்றும் மீசை அடர்த்தியாக வளரும்.