இந்திய மூத்த டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் அடுத்த ஆண்டு உடன் (2020)டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவைத்துள்ளார்.46 வயதான லியாண்டர் பேஸ் 28 ஆண்டுகளாக சர்வதேச டென்னிஸ் விளையாடி வருகிறார் இதுவரை 18 இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றி மகேஷ் பூபதியுடன் இணைந்து பல வெற்றிகளை குவித்துள்ளார். அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இந்த இணை பிரிந்தது.
மேலும் 7 ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஒரே இந்தியர் ஆவார் 1996 ஆம் ஆண்டு அட்லாண்டா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்று நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று தந்தார்.
டேவிஸ் கோப்பை டென்னிஸ் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றிகளை குவித்த பெருமையும் இவருக்கு உள்ளது.மேலும் இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்
நான் 2020 ஆம் ஆண்டு சீசன் ஆவலுடன் எதிர்பார்த்து எதிர்நோக்கி உள்ளேன். எனது அணியினருடன் பயணித்த சில குறிப்பிட்ட தொடர்களை தேர்வு செய்து விளையாடுவேன் உலகம் முழுவதும் எனது நண்பர்கள் ரசிகர்களுடன் மகிழ்ச்சியைக் கொண்டாடும் இந்த ஆண்டு எனக்கு உணர்வுபூர்வமாக இருக்கும் உங்களுக்கு நன்றி சொல்லும் ஆண்டாக இதை எடுத்துக் கொள்வேன் என்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இரட்டையர் பிரிவில் முன்னாள் நம்பர் ஒன் வீரராக இருந்த பேஸ் தற்போது இரட்டையர் தரவரிசையில் 105 இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.