சென்னை: கனிமொழி எம்பியின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெற தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு சென்னை ஹைகோர்ட் அனுமதி அளித்திருக்கிறது.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் கனிமொழி. அவரை எதிர்த்து போட்டியிட்டவர் பாஜகவின் தமிழிசை சவுந்திர ராஜன்.
தற்போது, அவர் தெலுங்கானா மாநில கவர்னராக இருக்கிறார். அந்த பதவிக்கு முன்பாக, கனிமொழியின் வெற்றியை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வேட்புமனுவில் ஏராளமான குறைபாடுகள் உள்ளன, எனவே அந்த வெற்றியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. ஆனால், தற்போது, தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக இருக்கிறார். இதையடுத்து கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கை வாபஸ் பெற அனுமதிக்குமாறு அவர் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே உத்தரவிட்டபடி, வழக்கு வாபஸ் தொடர்பாக அரசிதழில் வெளியிடப்பட்டதாக பதிவாளர் தரப்பில் கூறப்பட்டது. அதை கோர்ட் ஏற்றுக் கொண்டது.
இதையடுத்து, தேர்தல் வழக்கை வாபஸ் பெற தமிழிசை சவுந்தரராஜனுக்கு கோர்ட் அனுமதி தந்தது. மேலும், வழக்கு வாபஸ் குறித்து தலா ஒரு தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிக்கைகளில் 10 நாட்களில் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டது.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.