கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சற்று கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய நாள்!!

Photo of author

By Selvarani

கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சற்று கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டிய நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத்த பகவான். இன்னைக்கு இந்த நாள் உங்களுக்கு சற்று கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது நல்லது. சந்திராஷ்டமம் இன்றைய தினம் உங்கள் ராசியில் இருப்பதால் மனதில் சிறு சிறு சோர்வு உண்டாகும். கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் பெரிதாகலாம் என்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்பம் சுபிட்சகரமாக அமைவதற்கு நல்லது செய்ய வேண்டும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்களுக்கு அனுகூலமாக நடந்து கொள்வார்கள்.

வருமானம் வந்து சேர்வதில் காலதாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளின் கை ஓங்கும். உடலுறவு சிறப்பாக இருக்கும் என்றாலும் எடுக்கும் உணவு வகைகளை சரியாக எடுத்துக் கொள்வது நல்லது.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண அறும்பாடு பட வேண்டி இருக்கும். அரசியல்வாதிகள் அமைதி காக்க வேண்டும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் காலதாமதம் ஆகலாம். உறவினர்கள் பகை ஆகலாம். கடுக்காய் வாங்கல் சிறப்பாக இருக்கும் என்றாலும் புதிய முதலீடுகளை இன்றைய தினம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

காதலர்கள் கவனமாக பழகுவது நல்லது. நண்பர்கள் ஒரு அளவிற்கு சிறப்பாக உதவிகள் செய்வார்கள். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு மனதில் ஒருவித சோர்வு உடலில் ஒரு வித அசதியும் உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..