குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு… ஒருநாள் போட்டியா அல்லது டி20 போட்டியா… குழப்பத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்…!

Photo of author

By Sakthi

குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு… ஒருநாள் போட்டியா அல்லது டி20 போட்டியா… குழப்பத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்…
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசியதால் ஒருநாள் போட்டியானது டி20 போட்டி போல மாறியது.
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றது. இரண்டாவது டெஸ்ட் தொடர் சமனில்(Draw) முடிந்த நிலையில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.
இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகள் மோதும் ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று அதாவது ஜூலை 27ம் தேதி தொடங்கியது. நேற்று(ஜூலை27) நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் ரன் எடுக்க திணறியது. மேலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்ஸ்மேன் சாய் ஹோப் அவர்கள் மட்டும் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்கு பிடித்து கடைசி வரை ஆடினார். சாய் ஹோப் நிதானமாக விளையாடி 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அலிக் அதனசே 22 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரண்டன் கிங் 17 ரன்களிலும் ஹெட்மெயர் 11 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்துவீசினார். இவர் மூன்று ஓவர்கள் வீசி 6 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குல்தீப் யாதவ் வீசிய மூன்று ஓவர்களில் இரண்டு ஓவர்கள் மெய்டன் ஓவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்த்திக் பாண்டியா, முகேஷ் குமார், ஷர்தல் தக்கூர் தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து 50 ஓவர்கள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 23 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் சேர்த்தது. வெற்றி பெறுவதற்கு இந்திய அணாக்கு 115 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
எளிமையான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் இஷான் கிஷன் ஒருபுறம் நிதானமாக விளையாட மறுபுறம் சுப்மான் கில் 5 ரன்களிலும், ஹர்த்திக் பாண்டியா 7 ரன்களிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். மேலும் பொறுப்பாக விளையாட வேண்டிய சூர்யக்குமார் யாதவ் 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து விளையாடிய இஷான் கிஷன் அரைசதம் அடித்து 52 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணியின் வெற்றிக்காக ரவீந்திர ஜடேஜா 16 ரன்களும் கேப்டன் ரோஹித் சர்மா 12 ரன்களும் சேர்த்தனர். இதன்ல் இந்திய அணி 22.5 ஓவர்களில் 118 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்திய்சத்தில் முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணியில் குடகேஷ் மோடி 2 விக்கெட்டுகளையும், யன்னிக் கரியா, ஜய்டன் சீலெஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். முதல் ஒருநாள் போட்டியில் ஆட்டநாயகன் விருதை சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய குல்தீப் யாதவ் வென்றார். முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது.