பிறந்தநாள் வாழ்த்துடன் வெளியான கேப்டன் மில்லர் டீசர்… ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழு…!

0
47

 

பிறந்தநாள் வாழ்த்துடன் வெளியான கேப்டன் மில்லர் டீசர்… ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்த படக்குழு…

 

நடிகர் தனுஷ் அவர்களின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசரை படக்குழு பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியுடன் வெளியிட்டுள்ளது. தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்த டீசரில் ரசிகர்களுக்கு படக்குழு இன்ப அதிர்ச்சி ஒன்றையும் கொடுத்துள்ளது.

 

நடிகர் தனுஷ் அவர்கள் அடுத்ததாக நடித்து முடித்திருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தை இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ளார். நடிகை பிரியங்கா மோகன், நடிகர் சிவராஜ் குமார், நடிகர் சந்தீப் கிஷன், நடிகர் ஜான் கொக்கேன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

 

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் கேப்டன் மில்லர் திரைப்படத்தை தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசரை படக்குழு ஜூலை 28 அதாவது இன்று பகல் 12.01 மணிக்கு வெளியிட்டுள்ளது.

 

நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்தநாளான இன்று கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. கேப்டன் மில்லர் டீசரின் ஆரம்பத்திலேயே “Happy Birthday Dhanush” என்று பிறந்தநாள் வாழ்த்துச் செய்தி கூறப்பட்டுள்ளது. இந்த டீசரில் நடிகர் தனுஷ் அவர்களின் காட்சிகளை பார்க்கும் பொழுது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் நடிப்பின் முழுத் திறமையையும் வெளிப்படுத்திருப்பார் என்று தெரிகிறது. மேலும் நடிகை பிரியங்கா மோகன் அவர்களுக்கும் சில காட்சிகள் உள்ளது. நடிகை பிரியங்கா மோகன்.அவர்களின் காட்சிகளை பார்க்கும் பொழுது இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இதற்கு முன்பாக இயக்கிய சாணிக் காயிதம் திரைப்படத்தின் கீர்த்தி சுரேஷ் அவர்களின் கதாப்பாத்திரம் நியாபகத்திற்கு வந்தது. மேலும் இந்த டீசரில் நடிகர்கள் சிவராஜ் குமார், எட்வர்ட் சொனென் பிலிக், சந்தீப் கிஷன் ஆகியோரின் சில காட்சிகளும் உள்ளது.

 

மேலும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசரிலேயே திரைப்படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி கேப்டன் மில்லர் திரைப்படம் டிசம்பர் மாதம் 15ம் தேதி வெளியாகவுள்ளது. கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசரில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து படக்குழு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.