கூடுதலாக ஒருவருக்கு குரங்கு அம்மை! படுக்கை வசதியை அதிகரித்த அரசாங்கம்!
இந்தியாவை தவிர்த்து இதர நாடுகளில் இந்த குரங்கம்மை தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் நமது இந்தியாவில் தற்போது தான் படிப்படியாக இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 22 வயதான ஆப்பிரிக்க பெண்மணி நைஜீரியாவிற்கு சென்று டெல்லி வந்துள்ளார். அவரை சோதனை செய்ததில் அவருக்கு குரங்கமை உள்ளது உறுதியானது. தற்பொழுது அவர் எல் என் ஜே பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருகிறார். டெல்லியில் மட்டும் ஐந்து பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.
சமீபத்தில் கேரளாவில் தொற்று பாதிப்பு உறுதியாக முடிவுகள் வெளி வருவதற்கு முன்பே ஒருவர் இறந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு துற்று பாதிப்பு டெல்லியில் அதிகரித்து உள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். முன்கூட்டி நடவடிக்கையாக டெல்லி அரசாங்கம் மருத்துவமனைகளில் படுக்க வசதிகளை அதிகரித்துள்ளது. இந்தத் தொற்றானது காய்ச்சல் சொறி மற்றும் வீங்கிய நில நீர் அணுக்கள் ஆகியவற்றின் மூலம் பரவுகிறது. அத்தோடு குறித்து தின்னக்கூடிய அணில் எலி போன்ற விலங்குகளிடமிருந்தும் பரவுவதாக கூறுகின்றனர். அதேபோல சமீபத்தில் பாதிக்கப்பட்ட நாட்டிற்கு சென்று இங்கு திரும்பிய பலருக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருப்பதாக கூறுகின்றனர்.