கூறிய வார்த்தையை நிறைவேற்றுவாரா ஸ்டாலின்! அம்மாவின் மரணத்தை கண்டடுபிடிக்க முதல் கையெழுத்தா?
சட்டமன்ற தேர்தலானது கடந்த ஏப்ரல் 6-ம் தேதி நடந்து முடிந்தது.இந்த தேர்தலில் மூத்த தலைவர்கள் இன்றி நடைபெற்றதால் தேர்தல்களம் பரபரப்பாகவே இருந்தது.அதனையடுத்து இந்த தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற வேண்டுமென்பதற்காக அதிமுகவும் மற்றும் பத்து ஆண்டுகள் ஆட்சியில் அமராத காரணத்தினால் திமுக வும் பல தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர்.இது அனைத்தும் மக்களை கவர என நினைத்தாலும் இது முழுமையாக செய்யல்பாட்டிற்கு வருமா என அனைவரின் சந்தேகமாகவே உள்ளது.
இந்நிலையில் இந்த தேர்தலில் 159 இடங்களில் திமுக தனிபெருமான்மையுடம் வெற்றி பெற்றது.திமுக வெற்றி பெற்றதும் அடுத்த ஓரிரு நாட்களிலேயே அவரது தொண்டர்கள் அராஜகங்களை தொடங்க ஆரம்பித்துவிட்டனர்.அந்தவகையில் திமுக தலைவர் ஸ்டாலின் புகைப்படத்தை அம்மா உணவகத்திற்கு வைக்குமாறு வலியுறத்தி,அம்மா உணவகத்தையே அடித்து நாசகதி செய்தனர்.
அதனையடுத்து அவர்களை கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே திமுக ஸ்டாலின் நீக்கினார்.ஸ்டாலின் அவர்களை பதவியிலிருந்து நீக்கியது வெறும் கண்துடைப்பு என பலரும் கூறி வந்தனர்.அதனையடுத்து நாளை திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார்.இந்நிலையில் திமுக அமைச்சரவை பட்டியலை இன்று வெளியிட்டனர்.அதில் புதிய தோற்றங்களாக 15 அமைச்சர்களும்,பழைய தோற்றங்களாக 14 நபர்களையும் அமைச்சர்களாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதனிடையே நாளை திமுக தலைவர் பதவியேற்க உள்ளதால் முதல் கையெழுத்து எதற்கு போட போகிறார் என பலர் கேள்விகளை எழுப்பினர்.மற்றும் பலரோ திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து அம்மாவின் மரணத்தின் மர்மத்தை கண்டுபிடிப்பது என கூறி வந்தனர்.ஆனால் இதற்கு மாற்றாக முதல் கையெழுத்து அரிசி வாங்கும் ரேஷனுக்கு கொரோனா நிதி உதவியாக ரூ.4000 தருவதற்கு முதல் கையெழுத்து என கூறியுள்ளார்.இந்த நிதி உதவி கருணாநிதி அவர்களின் பிறந்தநாள் அன்று கையெழுத்திட இருந்த நிலையில் நாளை போட உள்ளார்.அப்போதுதான் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளுக்குள் நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளனர்.
அதற்கடுத்ததாக நகர பெண்கள் பேருந்துகளில் இலவசமாக செல்வதற்கு கையெழுத்திடப்படும் என கூறியுள்ளனர்.அதுமட்டுமின்றி மூன்றாவது கையெழுத்தாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் திட்டத்தின் படி திருமண உதவி தொகையாக ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரமாகவும் மற்றும் 8 கிராம் தங்கம் தருவதற்கு கையெழுத்திட போவதாகவும் கூறியுள்ளனர்.அம்மாவின் மரணத்திற்கு முதல் கையெழுத்து என கூறிய வார்த்தையை நிரவேற்றுவரா என பலர் பேசி வருகின்றனர்.