‘கூலி’திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில் இத்திரைப்படம் வசூல் சாதனை படைக்குமா….?

0
186

சென்னை:நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள ‘கூலி’மக்களியிடையே திரைக்கு வருவதற்கு முன்பே நல்ல வரவேற்பை பெற்று அதீத எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு 171 ஆவது திரைப்படமான இத்திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சத்யராஜ்,சுருதிஹாசன்,ஆமிர்கான்,சௌபின் ஷாயிர்,உபேந்த்ரா,நாகார்ஜூனா என இவ்வாறு நடிகர் பட்டாளமே நடித்துள்ளது.

இந்த திரைப்படம் சிறப்பு காட்சியாக நாளை 9 மணி முதல் தொடங்கி இரவு 2 மணி வரை சுமார் ஐந்து காட்சிகள் திரையிட தமிக அரசு உத்தரவிட்டுள்ளது இதற்காக முன்கூட்டியே இணையத்தில் டிக்கெட்கள் பதிவு செய்துவருகின்றன.பெரும்பாலான திரையரங்களில் டிக்கெட்கள் காலியாகிவிட்டன.இதுமட்டுமன்றி இத்திரைப்படத்தின் டிக்கெட்கள் 70 கோடி வரை திரைக்கு வருவதற்கு முன்னரே விற்பனையாகியுள்ளது.

இத்திரைப்படத்தின் ட்ரெய்லரை சமூகவலைத்தளத்தில் பார்த்த பிறகு இத்திரைப்படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சில் (LCU)வில்  இருக்குமா,இல்லையென்றால் தனிப்படமா என்ற கேள்வி மக்களியிடையே பெருமளவில் எழுந்துள்ளது.

‘கூலி’LCUவில் இருக்குமா,இல்லையா இதுவே இத்திரைப்படத்திற்கு மேலும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இதுமட்டுமன்றி இத்திரைப்படம் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு இத்திரைப்படம் 1000-1200 கோடி வசூல் செய்து சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படம் நாளை வெளியாகும் நிலையில் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் வெளியாகின்றன.LCUவில் இருக்குமா மற்றும் வசூல் சாதனை படைக்குமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

 

 

 

Previous articleஒரே ஒரு சூரியன்.. அதை மாற்ற முடியாது!! அதிமுக கூட்டணிக்கு வெடிகுண்டு போடும் பிரேமேலாத!!
Next articleநியூயார்க்கில் 43-வது சுதந்திர தின விழாவின் அணி வகுப்பு!! பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்பு!!