கேப்டன் மில்லர் டீசர் குறித்த அறிவிப்பு… எதிர்பார்ப்பில் காத்திருக்கும் தனுஷ்  ரசிகர்கள்…!

0
38

கேப்டன் மில்லர் டீசர் குறித்த அறிவிப்பு… எதிர்பார்ப்பில் காத்திருக்கும் தனுஷ்  ரசிகர்கள்…

 

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் எத்தனை மணிக்கு வெளியாகும் என்பது பற்றி படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் நடிகர் தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

 

வாத்தி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் தற்பொழுது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்குநர் அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ளார். நடிகை பிரியங்கா மோகன் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர்கள் சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஸ், சிவராஜ் குமார், ஜான் கோக்கென் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் அருண் மாதேஷ்வரன் கூட்டணியில் உருவாகி இருக்குப் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் கேப்டன் மில்லர் திரைப்படத்தை தயாரித்துள்ளது.

 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்தது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் ஜூலை 28ம் தேதி அதாவது நாளை வெளியாகும் என்று அறிவித்தது. இதையடுத்து ஜூலை 26ம் தேதி கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகும் நேரத்தை ஒரு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளது.

 

அதன்படி ஜூலை 28ம் தேதி நடிகர் தனுஷ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12.01(AM) மணிக்கு கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் நடிகர் தனுஷ் ரசிகர்கள் பலரும் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் டீசருக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.