கையும் களவுமாக சிக்கும் திமுக.. ஈரோடு தேர்தலில் ஆளும் கட்சியின் ஆதிக்கம்!! கண்டிக்க முடியாமல் திணறும் அதிகாரிகள்!!
தற்பொழுது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறப் போவதையொட்டி அதிமுக மற்றும் திமுக என அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆளும் கட்சி என்றாலே தேர்தல் களத்தில் சற்று அதன் ஆதிக்கம் செலுத்தும் என அனைவரும் அறிந்ததே, இதனை சுட்டிக்காட்டி அதிமுக தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில் தற்பொழுது அது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
ஆளும் கட்சி ஆனது தேர்தல் விதிமுறைகளை மீறி 120 இடங்களுக்கும் மேல் பூத் கமிட்டி அமைத்து வருவதாகவும் அதன் செலவுகள் அனைத்தும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளரான இ வி கே எஸ் இளங்கோவனின் தேர்தல் செலவு கணக்கில் சேர்த்துள்ளதாக கூறி மாஜி அமைச்சர் செங்கோட்டையன் உட்பட அனைவரும் புகார் அளித்ததோடு அதேபோல தற்போது ஆளும் கட்சி வாகனங்களில் விதிகளை மீறி கொடிகள் மற்றும் சின்னங்கள் இருப்பதாகவும் அதனை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கூறியுள்ளனர்.
மேலும் வாக்கு சேகரிப்பில் எதிர்க்கட்சிகள் இதனை சுட்டிக்காட்டி பேசி வருவதை அடுத்து, இதற்கு ரிவெஞ் கொடுக்கும் வகையில் திமுக அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது, அதிமுக மற்றும் இதர கட்சி சார்பில் கொடுக்கப்பட்ட புகார்கள் அனைத்தும் பொய்யான தகவல்களை என தெரிவித்தார்.
ஏனென்றால் தற்பொழுது தேர்தல் ஆணையத்தின் கீழ் இரண்டும் பறக்கும் படையினரை நியமித்து அவர்கள் அனைத்தையும் கண்காணித்து வரும் நிலையில், நாங்கள் எவ்வாறு தேர்தல் விதிமுறைகளை மீறி நடந்து கொள்ள முடியும். அதேபோல தேர்தல் வாகனத்திற்கு 40 பேருக்கு மட்டுமே பாஸ் கொடுத்திருக்கும் பட்சத்தில் அவர்கள் மட்டுமே கட்சிக்கொடியை கட்டிக்கொண்டு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள்.
அவர்களை தவிர்த்து வேறு யாரும் கொடி கட்டிக் கொண்டு பிரச்சாரம் செய்வதில்லை. அதிமுக பின்னடைவை சந்திக்க போகிறது என்பதை யூகித்து எங்கள் மீது இவ்வாறான பழிகளை போட்டு வருகிறார்கள். எனவே அவர்கள் அளித்த புகாரின் கீழ் வேண்டுமானால் மீண்டும் சோதனை செய்து கொள்ளட்டும் என தெரிவித்தார்.
ஆனால் இவ்வாறு அதிமுக திமுக என மாற்றி மாற்றி விமர்சனம் செய்து வரும் நிலையில், நடுவில் மாட்டிக் கொண்டு முழிப்பது என்னவோ தேர்தல் அதிகாரிகள் தான் என பலரும் கூறி வருகின்றனர். எதிர்க்கட்சி கூறியது போல் ஆளும் கட்சிக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கை எடுக்க முடியாமலும், அதே போல எதிர்க்கட்சி எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமலும் திக்கி திணறி வருகிறது. எனவே பிரச்சாரம் ஒரு புறம் தீவிரமாக இருக்கும் பட்சத்தில் இவ்வாறானவற்றை சமாளிக்க தேர்தல் அதிகாரிகள் சிரமப்படுவதாக கூறுகின்றனர்.