கொசுவை விரட்டியடிக்க இயற்கையான வழிமுறை! உடலுக்கு எந்த திங்குமில்லை!

0
403

இந்த மழைக்காலங்களில் மாலை நேரங்களில் கொசு உள்ளே வந்து கடித்து பாடாய்படுத்தும். அந்த கொசுவை விரட்டி எடுக்க இப்பொழுது அற்புதமான இயற்கை வழிமுறை ஒன்றை பார்க்க போகின்றோம்.

தேவையான பொருட்கள்:

1. பெரிய வெங்காயம்
2. கட்டி சாம்பிராணி
3. கடுகு எண்ணெய்.

செய்முறை:

1. பெரிய வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும்.
2. மேலே உள்ளதை கட் செய்து நீக்கி விடவும்.
3. இப்பொழுது கட்டி சாம்பிராணி நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் கிடைக்கும். அதை வாங்கி தூள் செய்து எடுத்துக் கொள்ளவும்.
4. இப்பொழுது ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.
5. அடுப்பில் வைத்து மூன்று ஸ்பூன் அளவிற்கு கடுகு எண்ணெயை சேர்த்து அதனுடன் ஒரு ஸ்பூன் அளவிற்கு கட்டிச் சம்பிராணி சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் அடுப்பில் வைக்கவும்.
6. சாம்பிராணி பொங்கி வரும் வரை காய்ச்சவும்.
7. ஆறவைத்து இதை எடுத்துக் கொள்ளுங்கள்.
8. இப்பொழுது இந்த எண்ணெயை வெங்காயம் முழுவதும் தடவி வைத்துக் கொள்ளுங்கள்.
9. இப்பொழுது ஜன்னல் பகுதிகள் அனைத்து இடங்களும் இந்த வெங்காயத்தை தொங்க விட்டீர்கள் என்றால் கொசு உங்கள் வீட்டில் பக்கம் வராது. இதேபோல் செய்து பயன்படுத்தும் பொழுது கொசு வருவதை தடுக்கலாம்.

Previous articleஜப்பான் பெண்களின் சீக்ரெட் இது தான்! ஒருமுறை பயன்படுத்தினாலே போதும்!
Next articleஉங்கள் வீட்டிற்குள் இந்த உயிரினங்கள் எல்லாம் நுழைந்தால் என்ன பலன்? நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here