கொரோனா தொற்று அதிகரிப்பு! மீண்டும் தடை உத்தரவு!

Photo of author

By Rupa

கொரோனா தொற்று அதிகரிப்பு! மீண்டும் தடை உத்தரவு!

கொரோனா தொற்றானது ஓர் ஆண்டு காலமாக மக்களை ஆட்டி படைத்து விட்டது.இந்நிலையில் 144 க்கு தடை உத்தரவு பிரபிக்கப்பட்டு மக்கள் வீட்டினுள்ளே அடைந்து கிடந்தனர்.பொருளாதாரம் பெருமளவு வீழ்ச்சியடைந்தது.மால்கள்,கோவில்கள் மற்றும் பூங்காக்கள் என அனைத்தும் மூடப்பட்டது.மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டிருந்தது.அரசு விதித்த விதிமுறைகளை மக்கள் பின்பற்றியதால் கொரோனாவின் தாக்காமனது சிறிது சிறிதாக குறைய தொடங்கியது.

இதனையடுத்து சில தளர்வுகளுடன் மக்கள் வெளியே செல்ல அனுமதிகப்பட்டது.அதன்பின் மால்கள்,கோவில்கள்,மற்றும் பூங்காக்கள் என அனைத்தையும் திறந்தனர்.மக்கள் லாக் டவுனில் வீட்டினுள்ளே முடங்கி கிடந்ததால் அனைத்தும் திறக்கப்பட்டதும் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்ல தொடங்கிவிட்டனர்.மக்கள் கொரோனாவை மறந்து வாழ ஆரமித்ததால் மீண்டும் கொரோனா தொற்று அதிக அளவு பரவ ஆரமித்துவிட்டது

இதைத்தொடர்ந்து மத்திய அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.கோவில்கள்,மால்கள் மற்றும் பூங்காக்கள் என அனைத்து இடங்களிலும் மக்கள் முகக் கவசம் கட்டாயம் அணித்து வர வேண்டும்.முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே கோவில்,மால் என அனைத்து இடங்களுக்கும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படும் என அறிவித்துள்ளனர்.

ஹோட்டல்களில் உட்கார்ந்து சாப்பிட அதிகம் அனுமதிக்காமல் பார்சல் செய்து கொடுக்க வேண்டும்.உணவை டெலிவரி செய்யும் ஊழியர்களின் வெப்ப நிலையை சோதித்த பிறகு டெலிவரி செய்ய அனுமதிக்க வேண்டும்.கோவில்களில் முகக்கவசம் அணியாமல் வாழும் பக்தர்களை கோவில்களுக்குள் அனுமதிக்க கூடாது என தெரிவித்துள்ளனர்.அவர்களின் வெப்ப நிலையையும் சோதித்த பிறகே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்க வேண்டும்.

மால்களில் உள்ளே செல்லும் அனைவரின் வெப்ப நிலையை சோதித்த பிறகே உள்ளே அனுமதிக்க வேண்டும்.அதற்கேற்ற ஊழியர்கள் நியமிக்க வேண்டும் என விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த கொரோனாவின் தாக்கம் அதிகமாகும் நிலையில் மீண்டும் ஊரடங்கு போடப்படும் என சுற்றுவட்டாரங்கள் கருதுகின்றனர்.