உலக நாடுகளையே அச்சுறுத்தி வந்த கொரோனா நோய் தொற்று இந்தியாவிலும் பரவியது. அதை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதனால் இந்திய பொருளாதாரம் பெரிதும் பாதிப்படைந்து என்பது அனைவரும் அறிந்ததே.
அதன்பிறகு சில தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று நோயின் தாக்கமானது குறைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களை கண்டறிய ஒரு கோடி பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. அதுமட்டுமன்றி காய்ச்சல் முகாம்கள் 4.39 லட்சம் இடங்களில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 213 பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது போன்று பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் குறைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்பட்டதால் தமிழகம் மீண்டு வருவதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.