கோவில்களில் ஏன் நிர்வாண சிலைகள் உள்ளன?

0
461

அனைவரும் கேட்பது ஆச்சரிய படுவது கோவில்களில் ஏன் நிர்வாண சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன ?

பாலியல் என்பது இந்து சமூகத்தில் மறைக்கப்பட வேண்டிய விஷயமாக ஒரு பொழுதும் இருந்ததில்லையாம். தாந்த்ரீக மரபில் படி, பாலியல் என்பது மனித உடலை உருவாக்கும் சக்தி என்று அந்த காலத்தில் கருதப்பட்டு சிலைகள் வடிக்கப்பட்டுள்ளது.

கோவில்களில் அனைத்து விதமான சிற்பங்களும் உள்ளன. நடனக்கலை சிற்பம், விலங்குகளின் சிற்பம், போர் சிற்பங்கள், கணித மற்றும் ஜோதிட சிற்பம்,இசை கருவி சிற்பங்கள், மல்யுத்த சிற்பங்களும் உள்ளன.கதை சொல்லும் சிற்பங்கள், விளையாட்டு சிற்பங்கள்
வாழ்வியல் சிற்பங்கள், மருத்துவ சிற்பங்கள் உள்ளன.

ஆனால் நாம் உற்று பார்ப்பது இதை மட்டுமே, அந்த காலத்தில் பாலியல் என்பது ஒரு சக்தி, கோவில்கள் ஒரு பல்கலைக்கழகம், ஒரு அருங்காட்சியகம்

கோவில்களில் ஆபாசச் சிலைகள் மட்டுமல்ல, அனைத்து சிலைகளும் உள்ளன. மனித வாழ்க்கையைப் பேசும் சிலைகள் அனைத்தும் அந்த காலத்தில் வடிக்கபட்டுள்ளது. இவற்றில் உடலுறவுச் சிலைகளும் காமம் சார்ந்த சிலைகளும் அடக்கம் என்று சொல்லப்படுகிறது. . பக்தி மேலோங்கியபோது குறியீடுகள் அவை என சொல்லப்படுகிறது.

இவை அனைத்தும் சாக்த மரபிலிருந்து வந்தவை. சாக்தம் பிரபஞ்ச ஆற்றலை பெண்ணாக பாவித்து, பெண்ணை சக்தி என கருதி, குழந்தையை பெற்று எடுத்தல் மற்றும் பால் ஊட்டுதல் ஆகியவற்றை ஆதார சக்தியாகக் கண்டு வணங்கி உள்ளனர். பெண் தெய்வங்கள் சிலைகளில் யோனியைக் காட்டுவது போன்ற நிலையில் உள்ளதை பார்த்திருப்பீர்கள், பெண்ணின் யோனி மாபெரும் சக்தி படைப்பு ஆற்றல் என கருதப்பட்டது.

ஆண்களின் உறுப்பு செயல் ஆற்றலாகவும் பெண்களின் யோனி விளைவு ஆற்றலாகவும் கருத்தில் கொண்டு பிரபஞ்சத்தின் முரணியக்கமான கருத்து X ஆற்றல் என்பதைப் உணர்ந்து கொண்டவர்கள் முன்னோர்கள், அது தான் அவர்களால் ஆன்மீகத்தில் அதிக தொலைவு முன்னகர முடிந்தது என சொல்லப்படுகிறது.

செல்வம் பெருக பல சடங்குகள் செய்துள்ளனர். அதில் செல்வம் இரு வழிகளில் கிடைக்கும் என தெரிந்த முன்னோர்கள், நிலம் மற்றும் பெண்கள் மூலம் குழந்தைகளாக கிடைக்கும் என வணங்கினர். இரண்டும் உற்பத்தி மூலங்கள். இவைதான் இறைவன் ஆற்றலை காண முடிந்த ஆதாரம் என கருதினர். மனித உண்மையின் உச்ச நிலையை அடையும் வழி. எனவே காமத்தினை அறிவின் வழியாக உணர வைக்கதான் தாந்திரீக மரபின்படி காம சிலைகளை கோவில்களில் நிறுவினர்.

 

மாபெரும் பொருள் கொண்ட இந்த சிலைகள் நம் முன்னோர்கள் நமக்கு நமக்கு உணர்த்தும் அறிவு பாடம்.

Previous articleஓ மை காட்? இது சீரியலின் ட்விஸ்டா? இல்லை கனவா? அதிர்ச்சியில் உறைந்து போன ரசிகர்கள்!!
Next articleமக்களே!!உங்களுக்கு இதய நோய் இருக்க?..இவை ஏற்படக் காரணங்கள் மற்றும் அவற்றை சரி செய்யும் முறைகள்..!