கோவை மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!  

0
277
#image_title

கோவை மக்களுக்கு காவல் கண்காணிப்பாளர் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

கோவை மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பையும் வேண்டுகோளையும் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக கோவை மாவட்டத்தில் போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்து வருகின்றது. இதைத் தடுக்க காவல் துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு மத்தியில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் நேற்று முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் வெளியிட்டுள்ள செய்தியில், “கோவை மாவட்டத்தில் போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்து வருகின்றது. இந்த செயல்களை தடுக்க சோதனைச் சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் கல்லூரிகளுக்கு அருகில் கஞ்சா விற்பனை செய்வதை தடுக்கவும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்.

போதை பொருள் தடுப்பு தொடர்பாக விழிப்புணர்வும் மேற்கொண்டு வருகிறோம். பொதுமக்கள் நீங்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Previous articleதானியங்கி இயந்திரம் மூலம் டாஸ்மாக் கடையில் மது விற்பனை தடை கோரிய வழக்கு!! மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!
Next articleஎந்த வகையில் திராவிட மாடல் ஆட்சி என்கிறார்கள்? நயினார் நாகேந்திரன் கேள்வி!!