சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!

0
344
Father Periyar Award for Social Justice! This is the last day to apply!
Father Periyar Award for Social Justice! This is the last day to apply!
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது! விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள்!

சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கானதந்தை பெரியார் விருது” 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000/-
(ரூபாய் ஜந்து லட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும்,
தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் மாண்புமிகு முதலமைச்சர்
அவர்களால் தேர்வு செய்யப்படுகிறது.
2022-ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார்
விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள்
வரவேற்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின்
வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன்
பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது
விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித்தலைவருக்கு விண்ணப்பிக்கலாம்.
தங்களது விண்ணப்பம் உரிய படிவத்தில் தங்களின் சுயவிவரம், முழு முகவரி,
தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம்
மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும்.
2022 ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான
விண்ணப்பங்களை 31.10.2022-க்குள் தகுதியான நபர்கள் விண்ணப்பித்து
பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  க.வீ.முரளீதரன், இ.ஆ.ப., அவர்கள்
தெரிவித்துள்ளார்.
Previous articleபோதிய ஆட்கள் இல்லை!!சிறை கைதிகளை சேர்க்க அழைப்பு விடுத்த ரஷ்ய உயர் அதிகாரி!..
Next articleமாணவர்களுக்கு அந்த பொருளை விற்ற வாலிபர்கள்! போலீசார்  அதிரடி நடவடிக்கை !