சர்ச்சையில் சிக்கிய அமேசான்! ரூ.96000 ஏசி வெறும் ரூ.5000!

Photo of author

By Rupa

சர்ச்சையில் சிக்கிய அமேசான்! ரூ.96000 ஏசி வெறும் ரூ.5000!

Rupa

Controversial Amazon! Rs 96000 AC is just Rs 5000!

சர்ச்சையில் சிக்கிய அமேசான்! ரூ.96000 ஏசி வெறும் ரூ.5000!

இந்த டிஜிட்டல் உலகத்தில் மக்கள் அனைவரும் முகம் பார்த்து பேசக்கூட நேரமில்லாமல் பரபரப்பாக செல்கின்றனர்.இவ்வாறு இருக்கின்ற சூலில் மக்கள் நேரடியாக சென்று எந்தவித பொருட்களையும் வாங்குவது இல்லை.அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் பொருட்கள் உட்பட அனைத்தையும் செல்போன் மூலம் ஆர்டர் செய்து பெற்றுக் கொள்கின்றனர்.தற்போதைய டிஜிட்டல் உலகில் அனைவரிடமும் செல்போன் உபயோகம் வந்துவிட்டது.

இதனை பயன்படுத்தி பல நிறுவனங்கள் லட்சக்கணக்கில் சம்பாரித்து வருகின்றனர்.சிலமுறை நாம் ஆர்டர் செய்யும் பொருளுக்கு பதிலாக வேறு ஏதேனும் பொருள் வருவதும் உண்டு.இதனை பயன்படுத்திக்கொண்டு அந்நிறுவனங்கள் பண்டிகைகள் போன்றவை வரும்போது அதிக ஆப்பர் கொடுத்து மக்களை பல பொருட்களை வாங்கிவிட செய்துவிடுகின்றனர்.இதை ஓர் வியாபார யுக்தியாகவும் பயன்படுத்துகின்றனர்.அந்தவகையில் அமேசான் நிறுவனம் தோஷியா என்ற நிறுவனத்தின் 1.8 டன் உள்ள ஏர் கண்டிஷனரை 93%  தள்ளுபடியில் தருவதாக ஓர் விளம்பரம் செய்தது.

93% என்றால் அந்த ஏசியின் தற்போதைய விலை ரூ.5800 மட்டுமே,அதுமட்டுமின்றி இந்த ஏசி-யை மாத தவனையில் தருவதற்கும் மேஸான் நிறுவனம் ஆப்ஷன் ஒன்றை கொடுத்திருந்தது.அந்த ஆப்ஷனானது மாதம் ரூ.278 கட்டி இந்த ஏசியை பெற்றுக்கொள்ளலாம் என்பது தான்.இந்த தள்ளுபடி விலையை பார்த்ததும் மக்கள் பலர் இந்த ஏசியை ஆர்டர் செய்து விட்டனர்.ஆனால் இந்த தள்ளுபடி விலையானது அமேசான் நிறுவனத்தின் கவனக்குறைவால் நடந்தது.அதனால் அமேசான் நிறுவனம் உடனே அதனை கண்டறிந்து அவற்றின் விலையை மாற்றிவிட்டது.தற்போது அந்த ஏசியானது ரூ.59000 க்கு என விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மாதம் ரூ.2,777 கட்டியும் இந்த ஏசியை பெற்றுக்கொள்ளும் என்ற ஆப்ஷனையும் தந்துள்ளது.

ஆனால் ரூ.5000 விலையில் ஏசி தள்ளுபடிக்கு வந்த போதே அந்த ஏசியை பலர் ஆர்டர் செய்துள்ளனர்.தற்போது அமேசான் நிறுவனம் ஆர்டர் செய்த  அந்த வாடிக்கையாளர்களுக்கு எந்த பொருளை அனுப்பும் என்பதில் பெரும் குழப்பமாகவே உள்ளது.அதுமட்டுமின்றி அமேசான் நிறுவனத்தின் இந்த கவனக் குறைவிற்கு பொது மக்கள் பலர் எதிர்ப்பு கூறி வருகின்றனர்.