சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் பட முதல் சிங்கிள் ரிலீஸ்… இன்று வெளியாகும் அறிவிப்பு!
சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த ரிலீஸாக தயாராகி வரும் திரைப்படம் பிரின்ஸ்.
சிவகார்த்திகேயன் நடித்து வரும் தமிழ்- தெலுங்கு திரைப்படமான பிரின்ஸ் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது பாண்டிச்சேரியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ள படக்குழுவினர் அங்கு சில காட்சிகளை படமாக்கியுள்ளனர். இதுதான் படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது படத்தில் தன் சம்மந்தப்பட்ட காட்சிகளில் நடித்து முடித்துவிட்டதாக நடிகை மரியா ரியாபோபாஷ்யா தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் மற்றும் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த நடிகை மரியா ரியாபோபாக்ஷா ஆகியோர் நடிக்க, தமன் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்துக்கு தமன் இசையமைப்பது இதுவே முதல் முறை. இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஏற்கனவே படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் பாடல் எப்போது வெளியாகும் என்பது குறித்து படக்குழுவினர் அப்டேட் கொடுத்துள்ளனர். அது சம்மந்தமான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று இசையமைப்பாளர் தமன் அறிவித்துள்ளார். ப்ரின்ஸ் திரைப்படம் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. அதே நாளில் கார்த்தியின் சர்தார் மற்றும் விஷாலின் லத்தி ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரின்ஸ் திரைப்படம் முதலில் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாவதாக இருந்த இந்த திரைப்படம் தற்போது தீபாவளிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.